Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?

Updated: 06 November 2019 11:30 IST

ஏடிபி பைனல் தொடரை நோவக் ஜெயித்து நடால் அரை இறுதிக்கு தகுதி பெறாமல் இருக்கும் பட்சத்தில் ஜோகோவிச் முதலிடத்தை அடையலாம்

Novak Djokovic, Roger Federer Drawn In Same ATP Finals Group
இந்த ஆண்டு விம்பிள்டண் இறுதி போட்டியில் பெடரர் - ஜோகோவிச் மோதினர் © AFP

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டென்னிஸ் உலகின் முக்கிய தொடராக ஏடிபி பைனல்ஸ் நடைபெறும். டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரானது அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் ஒரே பிரிவில் நோவக் ஜோகோவிச், ரோஜர் பெடரர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் டோமினிக் தியம், மாட்டியோ பெரதினியும் உள்ளனர். மற்றோரு பிரிவில் நம்பர் 1 வீரர் நடால், டேனில் மெத்வெதேவ், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், அலெக்ஸ்சாண்டர் வெர்வ் ஆகியோர் உள்ளனர்.

கடந்த வாரம் பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் காயத்தால் விலகிய நடால், ஏடிபி பைனல் தொடரில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார்.

இந்த ஆண்டின் பெரும் பகுதியில் நம்பர் 1 வீரராக இருந்து வந்த ஜோகோவிச், தனது நம்பர் 1 இடத்தை நடாலிடம் பறிகொடுத்துள்ளார். இருப்பினும் ஜோகோவிச்சால் மறுபடியும் நம்பர் 1 வீரராக முடியும்.

ஏடிபி பைனல் தொடரை நோவக் ஜெயித்து நடால் அரை இறுதிக்கு தகுதி பெறாமல் இருக்கும் பட்சத்திலும் இரண்டு பிரிவு ஆட்டத்தை வென்று இறுதி போட்டிக்கு ஜோகோவிச் தகுதி பெறும் போது நடால் ரவுண்ட் ராபினை கடக்காமல் இருந்தால் ஜோகோவிச்சால் முதலிடத்தை அடைய முடியும்.

Comments
ஹைலைட்ஸ்
  • தனது நம்பர் 1 இடத்தை நடாலிடம் பறிகொடுத்துள்ளார் ஜோகோவிச்
  • பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் காயத்தால் விலகினார் நடால்
  • ஏடிபி பைனல் தொடரில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார் நடால்
தொடர்புடைய கட்டுரைகள்
அடிலெய்ட் இன்டர்நேஷனலில் இருந்து வெளியேறுகிறார் நோவக் ஜோகோவிச்!
அடிலெய்ட் இன்டர்நேஷனலில் இருந்து வெளியேறுகிறார் நோவக் ஜோகோவிச்!
வி ஆர் தி சாம்பியன்ஸ் பாடலின் பியானோ வாசிப்பது போல் நடித்த நோவக் ஜோகோவிச்
'வி ஆர் தி சாம்பியன்ஸ்' பாடலின் பியானோ வாசிப்பது போல் நடித்த நோவக் ஜோகோவிச்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
Advertisement