அமெரிக்க ஓபன் 2018: காலிறுதில் போராடி வென்றார் ரபேல் நடால்!

Updated: 05 September 2018 13:53 IST

செப்டம்பர் 8 ஆம் தேதி நடக்க இருக்கும் அரை இறுதி போட்டியில், டெல்போட்ரோ - நடால் ஆகியோர் மோத உள்ளனர்

US Open 2018: Rafael Nadal Survives Five-Set Thriller Against Dominic Thiem To Reach Semi-Finals

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைப்பெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரபேல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் ஆகியோர் மோதினர்

போட்டி தொடங்கிய முதல் செட்டை 0-6 என்ற புள்ளி கணக்கில் டொமினிக் வென்றார். இது நடால் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

எனினும், அடுத்த இரண்டு செட்களை நடால் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 4 மணி நேரம் 49 நிமிடங்கள் பரபரப்பாக நடைப்பெற்ற இந்த போட்டியில், 0-6, 6-4, 7-5, 6-7 (4-7), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.

கடுமையாக போராடிய நடால், அரை இறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்துள்ளார். வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நடக்க இருக்கும் அரை இறுதி போட்டியில், டென்னிஸ் உலக தர வரிசையில் 3வது இடத்தில் இருக்கும் டெல்போட்ரோ - நடால் ஆகியோர் மோத உள்ளனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
Laver Cup: நடாலுக்கு
Laver Cup: நடாலுக்கு 'டிப்ஸ்' வழங்கிய பெடரர் - வைரல் வீடியோ
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
Advertisement