மாட்ரிட் ஓப்பனில் ஆடாமல் அரையிறுதிக்கு சென்ற ஜோகோவிச்!

Updated: 11 May 2019 15:42 IST

பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தில் இருந்த ஹாலப், தற்போது முதலிடத்துக்கு முன்னேறினார். பெலிண்டா 2016, 2017ல் மாட்ரிட் ஓப்பன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Madrid Open: Simona Halep Reaches Final, Novak Djokovic Gets Free Pass
சிமோனா ஹாலப்  6-2,6-7(2/7), 6-0 என்ற கணக்கில் பெலிண்டாவை பெண்கள் பிரிவில் விழ்த்தினார். © AFP

சிமோனா ஹாலப்  6-2,6-7(2/7), 6-0 என்ற கணக்கில் பெலிண்டாவை பெண்கள் பிரிவில் விழ்த்தினார். மாட்ரிட் ஓப்பனில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச் போட்டியே ஆடாமல் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தில் இருந்த ஹாலப், தற்போது முதலிடத்துக்கு முன்னேறினார். பெலிண்டா 2016, 2017ல் மாட்ரிட் ஓப்பன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் நம்பர் ஒன் வீரரும், இரண்டு முறை மாட்ரிட் கோப்பை வென்றவருமான ஜோகோவிச் மற்றும் மரின் சிலிச் இடையேயான ஆட்டம், சலிச்சின் உடல்நலக்குறைவு காரணமாக போட்டியில் ஆடவில்லை. அதனால், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் ஜோகோவிச்.

இதுகுறித்து கூறிய சலிச் "நான் இன்றைய போட்டியில் ஆடமுடியாமல் வயிற்று வலியால் விலகுகிறேன். இதற்காக வருந்துகிறேன். அனைவரது ஆதரவுக்கும் நன்றி" என்றார்.

இன்று நடக்கும் அரையிறுதியில் ஜோகோவிச் டொமினிக் தீமை அரையிறுதியில் எதிர்கொள்கிறார்.

இன்னொரு புறம் ஹாலப்புடன் கிகி பெர்டன்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இறுதிபோட்டியில் ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது. மாட்ரிட் எப்போதுமே ஊக்கமளிக்கும் என்றார்.

தற்போது நம்பர் 1 இடத்தில் இருக்கும் நவோமியை வென்றால் முதலிடத்தை பிடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால், பெலிண்டாவை வீழ்த்தியதே அவரது தரவரிசையை உயர்த்தும் என்று கூறப்பட்டுள்ளது.

"இரண்டாவது டைபிரேக்கரில் நான் அவசரப்பட்டேன். அதனால் சில எளிமையான வாய்ப்புகளை வீணடித்தேன். ஆனால், சுதாரித்துக்கொண்டு மூன்றாவது வாய்ப்பில் வீழ்த்தினேன்" என்றார் ஹாலப்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?
விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?
மாட்ரிட் ஓப்பனில் ஆடாமல் அரையிறுதிக்கு சென்ற ஜோகோவிச்!
மாட்ரிட் ஓப்பனில் ஆடாமல் அரையிறுதிக்கு சென்ற ஜோகோவிச்!
விம்பிள்டன் 2018 : கவனிக்கப்பட வேண்டிய 6 சூப்பர் லேடீஸ்
விம்பிள்டன் 2018 : கவனிக்கப்பட வேண்டிய 6 சூப்பர் லேடீஸ்
Advertisement