“வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சிகிச்சை…”- கம்-பேக் குறித்து மனம் திறக்கும் ஆண்டி முர்ரே

Updated: 19 June 2019 12:55 IST

"என் மீது எந்த வித அழுத்தத்தையும் நான் போட்டுக்கொள்ள விரும்பவில்லை. மீண்டும் டென்னிஸ் விளையாடப் போகிறேன் என்பதே எனக்கு அதிக திருப்தியளிக்கிறது"

"Life-changing" Surgery Gives Andy Murray Cause For Optimism
தற்போதைக்கு இரட்டையர் பிரிவில் மட்டும் என்ட்ரி கொடுக்கும் ஆண்டி முர்ரே, அடுத்ததாக ஒற்றையர் பிரிவிலும் விளையாடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.  © AFP

இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியிருந்த முன்னணி டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே, தான் மேற்கொண்ட சிகிச்சை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

3 முறை கிராண்டு ஸ்லாம் பட்டம் வென்றுள்ள முர்ரே, டபுள்ஸ் பிரிவில் மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளார். 

இந்நிலையில் சிகிச்சை குறித்து பேசிய முர்ரே, “மீண்டும் டென்னிஸ் அரங்கில் கால் பதிக்கும்போது எப்படி உணரப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நான் இந்த இடத்துக்கு வருவேன் என்று நினைக்கவில்லை” என்றவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் காயம் காரணமாக ஓய்வு அறிவிக்க யோசித்ததாக சொல்கிறார். 

“என் இடுப்புப் பகுதியில் செய்து கொண்ட சிகிச்சையானது, எனது வாழ்வைப் புரட்டிப் போடும் வகையில் இருந்தது. மீண்டும் டென்னிஸ் களத்துக்கு வர காத்திருக்கிறேன். ஆனால், என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. 

என் மீது எந்த வித அழுத்தத்தையும் நான் போட்டுக்கொள்ள விரும்பவில்லை. மீண்டும் டென்னிஸ் விளையாடப் போகிறேன் என்பதே எனக்கு அதிக திருப்தியளிக்கிறது. 

மீண்டும் டென்னிஸ் களத்தில் போட்டிபோட உள்ளது குறித்து ஆர்வமுடன் இருக்கிறேன். ஆட்டத்துக்காக பயிற்சி எடுக்கும்போதும் நன்றாக உணர்ந்தேன். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்கிறார் முர்ரே.

தற்போதைக்கு இரட்டையர் பிரிவில் மட்டும் என்ட்ரி கொடுக்கும் ஆண்டி முர்ரே, அடுத்ததாக ஒற்றையர் பிரிவிலும் விளையாடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார். 

அது குறித்து முர்ரே, “எனது எண்ணம் மீண்டும் சிங்கிள்ஸ் பிரிவில் விளையாட வேண்டும் என்பதில்தான் உள்ளது. ஆனால் எனது சிகிச்சைக்குப் பிறகு, இரட்டையர் பிரிவில் விளையாடுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதினேன்” என்று விளக்கினார். 

Comments
ஹைலைட்ஸ்
  • ஆண்டி முர்ரே, டென்னிஸ் அரங்கில் மீண்டும் கம்-பேக் கொடுக்க உள்ளார்
  • இரட்டையர் பிரவில் கம்-பேக் கொடுக்கிறார் முர்ரே
  • ஆண்டி முர்ரே இதுவரை 3 முறை கிராண்டு ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
ஆண்டி முர்ரே காயம் காரணமாக பயிற்சியை கைவிட்டார்: தகவல்
ஆண்டி முர்ரே காயம் காரணமாக பயிற்சியை கைவிட்டார்: தகவல்
மார்ச் 2017 பிறகு முதல் ஏடிபி பட்டத்தை வென்றார் ஆண்டி முர்ரே
மார்ச் 2017 பிறகு முதல் ஏடிபி பட்டத்தை வென்றார் ஆண்டி முர்ரே
ஐரோப்பிய ஓபன் காலிறுதிக்குள் நுழைந்தார் ஆண்டி முர்ரே!
ஐரோப்பிய ஓபன் காலிறுதிக்குள் நுழைந்தார் ஆண்டி முர்ரே!
கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் களத்தை தெறிக்கவிடப் போகும்
கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் களத்தை தெறிக்கவிடப் போகும் 'முர்ரே - செரீனா' ஜோடி!
“வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சிகிச்சை…”- கம்-பேக் குறித்து மனம் திறக்கும் ஆண்டி முர்ரே
“வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சிகிச்சை…”- கம்-பேக் குறித்து மனம் திறக்கும் ஆண்டி முர்ரே
Advertisement