டேவிஸ் கோப்பையில் பயஸின் இழப்பு இந்தியாவுக்கு பாதிப்பில்லை - மகேஷ் பூபதி

Updated: 31 January 2019 16:27 IST

பயஸ் தரவரிசை அடிப்படையில் ஆட்டத்தில் இடம்பெற முடியாமல் போனது

Leander Paes Won
லியாண்டர் பயஸ், டேவிஸ் கோப்பை போட்டிகளில் 43 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். © AFP

இந்தியா டேவிஸ் கோப்பை உலக குழுவுக்கான தகுதிச்சுற்று போட்டியில் இத்தாலியை வரும் சனிக்கிழமை கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது. இந்தியாவின் போட்டிகளில் பங்கேற்காத கேப்டனான மகேஷ் பூபதி "இந்த தொடரில் லியாண்டர் பயஸ் ஆடாததால் எந்த பாதிப்பும் இல்லை" என்று கூறியுள்ளார். 

பயஸ் தரவரிசை அடிப்படையில் ஆட்டத்தில் இடம்பெற முடியாமல் போனது. பயஸ் ஆடாதது குறித்த கேள்விக்கு பெரிய பாதிப்பு இல்லை என்று மகேஷ் பூபதி தெரிவித்தார். பயஸ், டேவிஸ் கோப்பை போட்டிகளில் 43 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

மேலும் மகேஷ் பூபதி, இடதுகை ஆட்டக்காரரான பரஜ்னேஷ் குணேஷ்வரனை பெரிதும் நம்புவதாகவும், அவர் அணியில் சமநிலையை கொண்டு வருவார் என்றும் கூறினார்.

ப்ரஜ்னேஷ், இந்தியாவின் அதிகபட்ச தரவரிசை உள்ள ஒற்றையர் பிரிவு வீரர். அவர் இத்தாலியின் மர்கோவை எதிர் கொள்ளவுள்ளார். மர்கோ, சமீபத்தில் ப்ரெஞ்ச் ஓப்பன் காலிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அதிர்ச்சி தந்தவர்.

2018ல் பரஜ்னேஷ் 243வது தரவரிசையில் துவங்கி 104வது தரவரிசைக்கு ஆண்டின் இறுதியில் முன்னேறியிருந்தார். 2 ஏடிபி பட்டம், மேலும் உலகின் 27வது நிலை வீரரை வீழ்த்தியுள்ளார்.

கிரிக்கெட்டில் எப்படி வலது , இடது காம்பினேஷன் உள்ளதோ அப்படிதான் இதுவும். 100 நிலையை நெருங்கி வரும் பரஜ்னேஷ் அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக கூறினார்.

விதிமுறைகளில் கொண்டு வந்துள்ள மாற்றம், அணிக்கு சாதகமான விஷயம் என்று மகேஷ் பூபதி கூறியுள்ளார்

பரஜ்னேஷ், ராம்குமார் ராமநாதன் மற்றும் யுகி பாம்ப்ரி இந்திய ஆண்டுக்குள் டாப் 100 இடங்களுக்குள் நுழைவார்கள் என்று மகேஷ் பூபதி நம்பிக்கை அளித்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா டேவிஸ் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் சனிக்கிழமை கலந்துகொள்கிறது
  • பயஸ், டேவிஸ் கோப்பை போட்டிகளில் 43 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்
  • இத்தாலிக்கு எதிரான போட்டியில் பரஜ்னேஷ் கலந்துகொள்கிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
காஷ்மீர் பிரச்சனை காரணமாக இடம் மாறுகிறதா டேவிஸ் கோப்பை?
காஷ்மீர் பிரச்சனை காரணமாக இடம் மாறுகிறதா டேவிஸ் கோப்பை?
புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து
புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து
டேவிஸ் கோப்பையில் பயஸின் இழப்பு இந்தியாவுக்கு பாதிப்பில்லை - மகேஷ் பூபதி
டேவிஸ் கோப்பையில் பயஸின் இழப்பு இந்தியாவுக்கு பாதிப்பில்லை - மகேஷ் பூபதி
Advertisement