Laver Cup: நடாலுக்கு 'டிப்ஸ்' வழங்கிய பெடரர் - வைரல் வீடியோ

Updated: 22 September 2019 13:34 IST

பெடரர் – நடால் இணை இணைந்து இரட்டையர் பிரிவில் சேர்ந்து விளையாடவுள்ளனர்.

Laver Cup: Roger Federer Coaches Rafael Nadal As Bjorn Borg Looks On In Epic Video. Watch
Laver Cup: ஐரோப்பா அணிக்காக பெடரர் - நடால் சேர்ந்து விளையாடுகின்றனர் © AFP

பீட் சாம்ப்ரஸ் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற போது உலகமே நினைத்த ஒன்று, இந்த சாதனையை முறியடிக்கவே முடியாது என்றே. ஆனால் தற்போது ரோஜர் பெடரரின் கிராண்ட்ஸ்லாம் வெற்றி 20. ரபேல் நடாலின் கிராண்ட்ஸ்லாம் 19.

டென்னிஸ் உலகின் அசைக்க முடியாத இரு தூண்களாக இருப்பவர்கள் இவர்கள். டென்னிஸ் களத்தில் அசுர தனமாக மோதி கொள்ளும் இவர்கள், டென்னிஸ் களத்தின் வெளியே சிறந்த நண்பர்கள்.

Laver Cup தொடரில் ஐரோப்பா அணிய எதிர்த்து விளையாடுகிறது உலக அணி. ஐரோப்பா அணியில் ரோஜர் பெடரருடன் நடாலும் சேர்ந்து விளையாடி வருகிறார். உலக அணியின் மிலோஸ் ரயோனிக்கை எதிர்த்து விளையாடி வந்த நடால் கடும் சவாலை எதிர்கொண்டார்.

அப்போது நடாலுக்கு சில ‘டிப்ஸ்' வழங்கினார் பெடரர். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதில் ஓர் கூடுதல் போனஸாக பெடரர், நடால் உடன் உள்ளார் போஜன் போர்க். டென்னிஸ் ரசிகர்களுக்கு இந்த வீடியோ ஓர் பொக்கிஷமாகும்.

பெடரரின் டிப்ஸ் மூலம் நடால் 6-3, 7-6 (7/1) என அந்த போட்டியை வென்றார். பெடரர் – நடால் இணை இணைந்து இரட்டையர் பிரிவில் சேர்ந்து விளையாடவுள்ளனர்.

ALLEZ‼️ #fedal

A post shared by Roger Federer (@rogerfederer) on

தன்னுடைய போட்டியில் வெற்றி பெற்ற நடால் கூறுகையில், ‘போட்டி செல்ல செல்ல நான் நன்றாக விளையாடியதாக கருதினேன்' என்றார்.

(With AFP inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • நடால் 6-3, 7-6 (7/1) என தனது போட்டியை வென்றார்.
  • ஐரோப்பா அணிய எதிர்த்து விளையாடுகிறது உலக அணி
  • டென்னிஸ் ரசிகர்களுக்கு இந்த வீடியோ ஓர் பொக்கிஷமாகும்.
தொடர்புடைய கட்டுரைகள்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
Advertisement