புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!

Updated: 18 February 2019 19:13 IST

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்ஸா புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவப்படை வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Pulwama Attack: Sania Mirza Says 14th February Was A Black Day For India
"சமூக வலைதளங்களில் பதிவிட்டுதான், நாட்டுப்பற்றை நிலைநாட்ட வேண்டும் என்றில்லை" - சானிய மிர்ஸா © Instagram

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்ஸா புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவப்படை வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பிப்ரவரி 14ம் தேதியை இந்தியாவின் கறுப்புதினம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், "எந்த கண்டனமும், இரங்கலும் அவர்களை ஆறுதல் படுத்திவிட முடியாது. இது நாட்டின் மிகப்பெரிய இழப்பு" என்று கூறியுள்ளார். 

ஸ்ரீநகர் ஜம்மு நெடுங்சாலையில் 78 பேருந்துகளில் 2500க்கும் அதிகமான மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது 350 கிலோ வெடி பொருள்கள் நிரம்பிய கார் தாக்கி 40க்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்தனர்.

32 வயதான சானிய மிர்ஸா, சமூக வலைதள கேலிகளை விமர்சித்துள்ளார். "அனைத்து பிரபலங்களும் எல்லா தாக்குதல்களுக்கும் பொதுவெளியில் கருத்து தெரிவித்துதான் நாட்டுப்பற்றை பூர்த்தி செய்ய வேண்டும்" என்று சொல்வதே தவறு என்று சாடியுள்ளார்.

இதற்காக மிக நீண்ட பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் சானியா மிர்ஸா. எல்லா சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு தான் நாட்டுப்பற்றை நிலைநாட்ட வேண்டும் என்றில்லை என்று சமூக வலைதங்களில் விமர்சிப்போரை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளார். 

இந்த நாள் மறக்க முடியாத கறுப்பு தினம் என்று கூறியுள்ள சானிய, தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார். அமைதி நிலவ பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். 

இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான இவர், 2004ம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2006ல் பத்ம ஸ்ரீ, 2015ல் ராஜிவ் கேல் ரத்னா, 2016ல் பத்ம பூஷன் என அரசு விருதுகளை வென்றுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • சானிய மிர்ஸா, தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்
  • வீரர்களின் மரணம் நாட்டின் மிகப்பெரிய இழப்பு: சானிய மிர்ஸா
  • "சமூக வலைதளங்களில் தான் நாட்டுப்பற்றை நிலைநாட்ட வேண்டும் என்றில்லை"
தொடர்புடைய கட்டுரைகள்
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா
"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!

Advertisement