Listen to the latest songs, only on JioSaavn.com
 

"உன்னை நிச்சயம் கண்டுபிடிப்பேன்" -ரசிகரை முறைத்த ஜோகோவிச்

Updated: 31 August 2019 14:40 IST

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர் ரசிகர் ஒருவருடன் ஆக்ரோஷமான விவாதத்தில் ஈடுபட்டார் ஜோகோவிச்.

Novak Djokovic Clashes With US Open Fan During Practice Session. Watch Video
அடுத்த போட்டியில் வாவ்ரிங்காவை எதிர்கொள்கிறார் ஜோகோவிச். © AFP

நோவக் ஜோகோவிச் டெனிஸ் குடுலாவை 6-3.6-4.6-2 என்ற கணக்கில் வீழ்த்தி அமெரிக்க ஓப்பனில் கடைசி 16 சுற்றுக்கும் முன்னேறினார். எனினும் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர் ரசிகர் ஒருவருடன் ஆக்ரோஷமான விவாதத்தில் ஈடுபட்டார். 16 முறை க்ராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிச் வார்ம் அப்பின் போது ரசிகர் ஒருவர் சீண்டியதற்கு, அவரிடம் சென்று ஆகோரோஷமாக உரையாடி ''நான் உன்னை கண்டுபிடிக்கிறேன். இந்த ஆட்டம் முடியட்டும், நிச்சயமாக உன்னை கண்டறிவேன்" என்றார்.

போட்டிக்கு பின்னர் இந்த உரையாடல் குறித்த கேள்விக்கு, "அது ஒரு சிறுய உரையாடல்தான். அந்த மனிதரை பிடித்துவிட்டது. அவருக்கு குடிக்க எதாவது தரலாம் என அழைத்தேன்" என்றார்.

இது தங்களது ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்ற கேள்விக்கு, நிச்சயமாக அவர் எனக்கு பெரிய அளவில் உதவினார். 

"யார் என்று கூட தெரியாது. அவரால் எனக்கு உதவ முடிந்தது பொருமையளிக்கிறது" என்றார்.

"இது குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் அவர் எனக்கு நன்மை செய்திருப்பதாகவே நினைக்கிறேன்". மேலும், "இது ஆர்த்தார் மைதானத்தின் இரவு ஆட்டங்களுக்கே உள்ள அடையாளம்" என்றார்.

"இரவு ஆட்டங்களில்  நிறையே பேர் குடித்து விட்டு வந்தனர். அதனால் அப்படி நடந்தது இருந்தாலும் முடிவு சிறப்பாகவே அமைந்தது" என்றார்.

அடுத்த போட்டியில் வாவ்ரிங்காவை எதிர்கொள்கிறார். அவரை கடைசியாக 2016 அமெரிக்க ஓப்பனில் எதிர்கொண்டார். அதன்பிறகு எதிர்கொள்வது இதுவே முதல்முறை.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அடிலெய்ட் இன்டர்நேஷனலில் இருந்து வெளியேறுகிறார் நோவக் ஜோகோவிச்!
அடிலெய்ட் இன்டர்நேஷனலில் இருந்து வெளியேறுகிறார் நோவக் ஜோகோவிச்!
வி ஆர் தி சாம்பியன்ஸ் பாடலின் பியானோ வாசிப்பது போல் நடித்த நோவக் ஜோகோவிச்
'வி ஆர் தி சாம்பியன்ஸ்' பாடலின் பியானோ வாசிப்பது போல் நடித்த நோவக் ஜோகோவிச்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
Advertisement