''என்னை விட அவர் சிறப்பாக ஆடினார்'' - தோற்றவரை புகழ்நத நடால்

Updated: 25 April 2019 18:35 IST

ரஃபேல் நடால் பார்சிலோனா ஓப்பனை சற்று தடுமாற்றத்துடன் துவங்கியுள்ளார். கடைசி 16 சுற்றுக்கான போட்டியில் அர்ஜெண்டினாவின் லியானர்டோ மேயரை 6-7 (7/9), 6-4, 6-2 என்று போராடி வீழ்த்தினார். 

"I Wasnt Competing Well": Rafael Nadal Battles Back In Barcelona
நடால் ஃபெடரருடனான கடைசி 4 மோதல்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளார். © AFP

ரஃபேல் நடால் பார்சிலோனா ஓப்பனை சற்று தடுமாற்றத்துடன் துவங்கியுள்ளார். கடைசி 16 சுற்றுக்கான போட்டியில் அர்ஜெண்டினாவின் லியானர்டோ மேயரை 6-7 (7/9), 6-4, 6-2 என்று போராடி வீழ்த்தினார்.  உலகின் நம்பர் 2 வீரரான நடால், அடுத்த மாதம் ஃப்ரெஞ்ச் ஓப்பன் துவங்கவுள்ள நிலையில் இந்த போட்டியை பதட்டமாக வென்றுள்ளார். சக நாட்டு வீரரான டேவிட் ஃபெடரர் தனது அடுத்த சுற்றில் நடாலை சந்திகவுள்ளார். நடால் ஃபெடரருடனான கடைசி 4 மோதல்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

நடால் போட்டிக்கு பின்பு கூறும்போது ''இது ஒரு கடினமான ஆரம்பம். தொடர்ந்து வெற்றியை பதிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.

மேயரை பாராட்டிய நடால் "அவர் சிறப்பாக ஆடினார். நான் அந்த அளவுக்கு ஆடவில்லை. எனது அணுகுமுறையால் நான் அடுத்த சுற்றுக்கு முன்னேறினேன்" என்றார்.

நடாலும், டேவிட் ஃபெடரரும் 25-6 என்ற வெற்றி விதத்தில் உள்ளனர். ''டெவிட்டுக்கு எதிராக ஆடுவது சுலபமான விஷயமல்ல. அவர் ஒரு சிறந்த வீரர்" என்றார். 

63ம் நிலை வீரரான மேயர் முதல் சுற்றில் நடாலுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார். பின்னர், சுதாரித்த நடால் அடுத்த இரண்டு சுற்றுகளை போராடி வெற்றி பெற்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பால்கிட் மீது பந்து தாக்கிய பின் நடாலின் செயல் அனைவரையும் ஈர்த்தது!
பால்கிட் மீது பந்து தாக்கிய பின் நடாலின் செயல் அனைவரையும் ஈர்த்தது!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
Advertisement