12வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் வென்று நடால் சாதனை!

Updated: 11 June 2019 09:37 IST

ஆண்கள், பெண்கள் என அனைத்து பிரிவினர் ஆட்டத்திலும் ஒரே பட்டத்தை அதிக முறை வென்றவர் என்ற பெருமையை நடால் பெற்றார்.

Rafael Nadal Sweeps To 12th French Open And 18th Grand Slam Title
இதன் மூலம் தனது 12வது ஃப்ரெஞ்ச் ஒப்பன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். © AFP

ரஃபேல் நடால் 12வது முறையாக ஃபிரெஞ்ச் ஓப்பன் படத்தை வென்று சாதனை படைத்துள்ளார். ஆண்கள், பெண்கள் என அனைத்து பிரிவினர் ஆட்டத்திலும் ஒரே பட்டத்தை அதிக முறை வென்றவர் என்ற பெருமையை நடால் பெற்றார். ஆஸ்திரேலிய வீரர் தெய்மை   6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார். மொத்தமாக 20 பெரிய பட்டங்களை வென்ற ஃபெடரரை விட இரண்டு பட்டங்கள் குறைவாக உள்ளார் நடால். ஜோகோவிச்சைவிட 3 பட்டங்கள் அதிகமாக உள்ளார். மொத்தமாக பங்கேற்ற 95 ஃபிரெஞ்ச் ஓப்பன் ஆட்டங்களில் 93 வெற்றிகளை பெற்று கிங் ஆஃப் க்ளே என்ன நிரூபித்துள்ளார்.  

இது நடாலின் 82வது பட்டம் மற்றும் 950வது போட்டி வெற்றியாகும். 

53 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட்டை முதலில் 3-2 என தெய்ம் முன்னிலை வகித்தார். பின்னர் அந்த செட்டை 6-3 என வென்றார் நடால்.

இரண்டாவது செட்டை போராடி இழந்தார் நடால். அடுத்த இரண்டு செட்களை 6-1,6-1 என்று இழந்தார் தெய்ம். 

1995ல் ஆஸ்திரியா சார்பில் தாமஸ் மிய்யுலர் பட்டம் வென்றார். அதன்பின் பட்டம் வென்றவர் தெய்ம் தான். கடைசி இரண்டு செட்களில் 3-0 என அபாரமாக ஆரம்பித்தார் நடால்.

இதன் மூலம் தனது 12வது ஃப்ரெஞ்ச் ஒப்பன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஃபெடரர்
விம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஃபெடரர்
டென்னிஸ் ராஜாவிற்கு ஈடுகொடுப்பாரா களிமண் தரையின் ராஜாதி ராஜா?- பெடரர் vs நடால்!
டென்னிஸ் ராஜாவிற்கு ஈடுகொடுப்பாரா களிமண் தரையின் ராஜாதி ராஜா?- பெடரர் vs நடால்!
அரையிறுதியில் பெடரர் - நடால் போட்டியை எதிர்பார்க்கலாமா? விம்பிள்டண் அப்டேட்...!
அரையிறுதியில் பெடரர் - நடால் போட்டியை எதிர்பார்க்கலாமா? விம்பிள்டண் அப்டேட்...!
12வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் வென்று நடால் சாதனை!
12வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் வென்று நடால் சாதனை!
காலிறுதிக்கு ஜோகோவிக், நடால் தகுதி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்.!
காலிறுதிக்கு ஜோகோவிக், நடால் தகுதி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்.!
Advertisement