''அம்மா, சாம்பியன், அரசி, கடவுள் '' செரினாவின் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்

Updated: 28 May 2019 20:34 IST

பிரெஞ்ச் ஓப்பனில் செரினா தனது உடைக்கு மேல் அணியின் கேப் எனும் மோல் கோட்டில் ''அம்மா, சாம்பியன், அரசி, கடவுள்'' என்று எழுதப்பட்டிருந்தது.

French Open: Serena Williams Arrives Wearing Cape With "Mother, Champion, Queen, Goddess" Emblazoned On It
செரினாவின் கேப்பில் ''அம்மா, சாம்பியன், அரசி, கடவுள் '' என்று எழுதப்பட்டிருந்தது. © Instagram

செரினா வில்லியம்ஸ் கடந்த வருடம் பிரெஞ்ச் ஓப்பனில் ப்ளாக் பாந்தர் உடை அணிந்து வந்தது தடை விதிக்கப்பட்டது. இந்த வருடம் பிரெஞ்ச் ஓப்பனில் செரினா தனது உடைக்கு மேல் அணியின் கேப் எனும் மோல் கோட்டில் ''அம்மா, சாம்பியன், அரசி, கடவுள்'' என்று எழுதப்பட்டிருந்தது. அதனை அணிந்து வந்த செரினாவின் உடை கருப்பு வெள்ளையில் வரிவரியான உடையாக இருந்தது. இது செரினாவின் புதிய ஃபேஷனாக பிரெஞ்ச் ஓப்பனில் இருந்தது என்று ட்விட்டரில் வைரலானது.

37 வயதான செரினா முதல் செட்டை இழந்தாலும், பின்னர் 2-6, 6-1, 6-0 என்ர கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

83ம் நிலை வீராங்கனையிடம் தடுமாறி வென்றார் செரினா. ஆனால் அவரது உடை இந்த போட்டியில் பெரிய பேசுபொருளானது. உடை குறித்த கேள்விக்கு "எல்லாரும் சாம்பியன் ஆகலாம் . அல்லாருமே ராணிகள் தான். ஆனால் நான் செரினாவாக தான் இருக்கிறேன்" என்றார். 

24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உலக சாதனையை சமன் செய்யும் முனைப்பில் செரினா உள்ளார். கடைசி 13 போட்டிகளில் 12 போட்டிகளை வென்றுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?
விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?
கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் களத்தை தெறிக்கவிடப் போகும்
கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் களத்தை தெறிக்கவிடப் போகும் 'முர்ரே - செரீனா' ஜோடி!
நோவக், செரினா வெற்றி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்!
நோவக், செரினா வெற்றி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்!
Advertisement