காலிறுதிக்கு ஜோகோவிக், நடால் தகுதி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்.!

Updated: 04 June 2019 14:04 IST

அலெக்சாண்டர் 3-6, 6-2, 6-2, 7-6 (7/5) என செட் கணக்கில் இத்தாலியின் ஃபாபியோ போக்னினியை வீழ்த்தினார்

French Open 2019: Record-Setting Novak Djokovic Into Last-Eight, Kei Nishikori To Face Rafael Nadal
காலிறுதிக்கு நோவக் ஜோகோவிக் தகுதி பெற்றார் © AFP

தொடர்ந்து 10வது முறையாக பிரெஞ்ச் ஓபனின் காலிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தார் நோவக் ஜோகோவிக். உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நோவக் ஜோகோவிக் 6-3, 6-2, 6-2 என செட் கணக்கில் ஜெர்மனியின் ஜென் – லெனார்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

‘மழை வந்ததால் இந்த போட்டி சற்று சிரமமாக இருந்தது. இருப்பினும் எனது ஆட்டத்தின் மீது முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என நோவக் ஜோகோவிக் தெரிவித்தார்.

காலிறுதியில் இத்தாலியின் அலெக்சாண்டர் வெர்வெக்கை சந்திப்பார் நோவக் ஜோகோவிக். அலெக்சாண்டர் 3-6, 6-2, 6-2, 7-6 (7/5) என செட் கணக்கில் இத்தாலியின் ஃபாபியோ போக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

‘நோவக் எதிரான காலிறுதி போட்டி கடினமாக இருக்க போகிறது. அந்த போட்டிக்காக நான் காத்திருக்கிறேன்' என அலெக்சாண்டர் தெரிவித்தார்.

ஜப்பானின் நிசிகோரி 6-2, 6-7 (8/10), 6-2, 6-7 (8/10), 7-5 என செட் கணக்கில் பெனாட் பைரியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். அவர் காலிறுதியில் களி மண் தரையின் ராஜாவான ரபேல் நடாலை சந்திக்கிறார்.

இதுவரை 12 முறை நடாலை எதிர்த்து விளையாடியுள்ளார் நிசிகோரி. அதில் இரண்டு முறை மட்டுமே நிசிகோரி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Comments
ஹைலைட்ஸ்
  • காலிறுதியில் இத்தாலியின் அலெக்சாண்டர் வெர்வெக்கை சந்திப்பார் நோவக்
  • நிசிகோரி காலிறுதியில் களி மண் தரையின் ராஜாவான ரபேல் நடாலை சந்திக்கிறார்.
  • ஜோகோவிக் 6-3, 6-2, 6-2 என செட் கணக்கில் ஜெர்மனியின் ஜென்னை வென்றார்
தொடர்புடைய கட்டுரைகள்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயத்துக்கு பின் ஆடவந்த ஜோகோவிச் ஜப்பான் ஓப்பன் காலுறுதிக்கு தகுதி!
காயத்துக்கு பின் ஆடவந்த ஜோகோவிச் ஜப்பான் ஓப்பன் காலுறுதிக்கு தகுதி!
Advertisement