அமெரிக்க ஓபன்: 16வது சுற்று போட்டியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி!

Updated: 04 September 2018 13:13 IST

ரோஜர் பெடரர் கலந்து கொண்ட 41 அமெரிக்க ஓபன் போட்டிகள், டென்னிஸ் தரவரிசையில் 50வது இடத்திற்கு பின் இருக்கு போட்டியாளரிடம் பெடரர் தோற்பது இதுவே முதல் முறையாகும்

US Open 2018: Roger Federer Reveals He Struggled To Breathe During Shock Defeat
© AFP

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றி போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இன்று நடைப்பெற்ற 16வது சுற்று போட்டியில், சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மன் ஆகியோர் மோதினர்.

உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 55வது இடத்தில் இருக்கும் ஜான் மில்மன், 3-6, 7-5, 7-6(9-7), 7-6(7-3) என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தினார். உலக தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும், ரோஜர் பெடரர், அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்வார் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கையில், 16வது சுற்று போட்டியில் வெளியேரியது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள ஆர்தூர் ஆஷே மைதானத்தில் இந்த போட்டி நடைப்பெற்றது. “வெப்ப சலனம் அதிகமாக இருந்ததால், என்னால் சுவாசிக்க முடியவில்லை. போட்டியில் விளையாடும் போது முதல் முறையாக இப்படி ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டுள்ளது. என்னால் முழு கவனத்தோடு விளையாட முடியவில்லை.” என்று ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

ரோஜர் பெடரர் கலந்து கொண்ட 41 அமெரிக்க ஓபன் போட்டிகள், டென்னிஸ் தரவரிசையில் 50வது இடத்திற்கு பின் இருக்கு போட்டியாளரிடம் பெடரர் தோற்பது இதுவே முதல் முறையாகும்.

மேலும், “இந்த போட்டியில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. எனினும், கடுமையான நேரங்களிலும் ஜான் மில்மன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.” என்று பெடரர் தெரிவித்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • Federer lost to 55th-ranked Australian John Millman
  • Federer revealed he struggled to breathe during his shock defeat
  • Millman won 3-6, 7-5, 7-6 (9/7), 7-6 (7/3)
தொடர்புடைய கட்டுரைகள்
அறுவை சிகிச்சை காரணமாக பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்!
அறுவை சிகிச்சை காரணமாக பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்!
ஆஸ்திரேலிய ஓபனில் கண்ணாமூச்சி விளையாடிய ரோஜர் பெடரர்!
ஆஸ்திரேலிய ஓபனில் கண்ணாமூச்சி விளையாடிய ரோஜர் பெடரர்!
"கொலம்பியாவில் போட்டி ரத்தானது என்னை பலவீணம் ஆக்கியது" - ரோஜர் பெடரர்
"கொலம்பியாவில் போட்டி ரத்தானது என்னை பலவீணம் ஆக்கியது" - ரோஜர் பெடரர்
ரோஜர் பெடரரை பின்பற்றும் சிறுவன்... வீடியோ பகிர்ந்த ஏடிபி!
ரோஜர் பெடரரை பின்பற்றும் சிறுவன்... வீடியோ பகிர்ந்த ஏடிபி!
ரோஜர் பெடரர் உருவத்தில் நாணயம் வழங்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு!
ரோஜர் பெடரர் உருவத்தில் நாணயம் வழங்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு!
Advertisement