13 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்றது குரேஷியா!

Updated: 26 November 2018 11:27 IST

குரேஷியா ப்ரான்ஸை வீழ்த்தி, 13 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்றுள்ளது.

Davis Cup: Croatia Clinch 3-1 Victory Over France To Win Title
குரேஷியா, டேவிஸ் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது. © AFP

டேவிஸ் கோப்பை இறுதி போட்டியில் ஃப்ரான்ஸை வீழ்த்தி பட்டம் வென்றது குரேஷியா. இறுதிப்போட்டியில் மோதிய குரேஷியாவின் மரின் சிலிச், ஃப்ரான்ஸின் லூகாஸ் பெளலியை 7-6 (7/3), 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார். முதல் செட்டை டைப்ரேக்கருக்கு கொண்டு சென்றாலும் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தைத் தோற்றார். குரேஷியா அனைத்து போட்டிகளையும் நேரடி செட்களிலேயே வென்றது.

இது குறித்து கூறிய சிலிச் " இது ஒரு கனவு வாரம். ஒற்றையர் பிரிவில் நாங்கள் சிறப்பாக ஆடாவிட்டாலும் கோப்பை எங்கள் வசமானது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

குரேஷியா, டேவிஸ் கோப்பையை இரண்டாவது முறையாக வெல்கிறது. ஆனால் 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் வென்றுள்ளது. "இது ஒரு சிறப்பான வெற்றி" என்று சிலிச் தெரிவித்தார்.

இந்த வெற்றி மூலம் இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஃபைனலில் ஃப்ரான்ஸிடம் தோற்ற குரேஷியா இப்போது டேவிஸ் கோப்பையை வென்று பழிதீர்த்துக் கொண்டது என்று ரசிகர்கள் ஆர்பரித்து வருகின்றனர்.

அதே சமயம் இந்த வெற்றிக்கு ஃப்ரான்ஸ் அணி கேப்டன் குரேஷியாவை பாராட்டி ட்விட் செய்துள்ளார். "2016 இறுதி போட்டியில் சிலிச் அர்ஜெண்டினாவுடன் முதல் புள்ளியை வென்று முன்னிலையில் இருந்தார். ஆனால் அதனை 3-2 என்று தோற்றார். இப்போது ஃப்ரான்ஸும் அதே நிலைய தான் சிலிச்சிடம் இருந்தது" என்று க்ரஜான் கூறியுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மாட்ரிட் ஓப்பனில் ஆடாமல் அரையிறுதிக்கு சென்ற ஜோகோவிச்!
மாட்ரிட் ஓப்பனில் ஆடாமல் அரையிறுதிக்கு சென்ற ஜோகோவிச்!
13 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்றது குரேஷியா!
13 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்றது குரேஷியா!
Advertisement