"புல் கூட முன்பில்லாத உணர்வை வெளிப்படுத்தியது": விம்பிள்டன் வெற்றிக்கு பின் ஜோகோவிச்

Updated: 16 July 2019 16:22 IST

வெற்றிக்கு பின்பு தரையில் இருந்த புல்லை எடுத்து தனது வாயில் வைத்து மென்றார் ஜோகோவிச்.

Novak Djokovic Says "Grass Tasted Like Never Before" After Wimbledon Win
ஜோகோவிச் ஃபெடரரை 7-6 (5), 1-6, 7-6 (4), 4-6, 13-12 (3) என்ற கணக்கில் போராடி வென்றார். © Instagram

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான செர்பிய வீரர் ஜோகோவிச் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஃபெடரரை வென்றார். இந்த போட்டி தன் வாழ்நாளில் மறக்க முடியாத போட்டி என்று குறிப்பிட்டுள்ளார். ஜோகோவிச் 5வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார். இவர் ஃபெடரரை 7-6 (5), 1-6, 7-6 (4), 4-6, 13-12 (3) என்ற கணக்கில் போராடி வென்றார். இந்த ஆட்டம் 4 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. 5வது செட்டில் இருவரும் கடுமையாக போராடியது ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்தது. இது மறக்க முடியாத ஆட்டம் என ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

It was a match to remember forever. Match that had everything in it. Match that transcends our sport. I am eternally grateful to be part of it. Major respect to Roger for a titan fight. It has been quite a tennis journey for me in the last 12 months. Coming back from injury and trying to get to the level of tennis which would allow me to compete for Slams. Self belief, resilience, dedication and major support from my closest people in Life allowed me to be where I am today. I am blessed and I am aware of it. Wimbledon, it has been a great pleasure to make history and share the court with legend of our sport once more. I will keep on dreaming to still be part of these memorable moments in the future. By the way, grass tasted like never before

A post shared by Novak Djokovic (@djokernole) on

"இந்த போட்டியில் விளையாடியது பெருமையளிக்கிறது. எனக்கு எப்போதுமே ஃபெடரார் மீது மரியாதை உள்ளது" என்றார்.

காயத்திலிருந்து மீண்டு வந்து பட்டம் வெல்வது மகிழ்ச்சியளிப்பதாக ஜோகோவிச் கூறினார். 

இந்த வெற்றிக்கு பின்பு தரையில் இருந்த புல்லை எடுத்து தனது வாயில் வைத்து மென்றார் ஜோகோவிச். 

தன்னம்பிக்கை, ஒருமுகத்தன்மையோடு இருப்பது, அர்பணிப்பு மற்றும் தன்னை சார்ந்தவர்களின் ஆதரவு ஆகியவைதான் தன்னை வெல்ல வைத்தது என்று பேசினார் ஜோகோவிச்.

ஃபெடரரின் 20 கிராண்ட்ஸ்லாம், மற்றும் நடாலின் 18 கிராண்ட்ஸ்லாம் சாதனையை நெருங்கிவருகிறார். இந்த வெற்றி எல்லா காலத்திலும் மறக்க முடியாத ஒன்றாக அமையும், இந்த புல் முன்பில்லாததைவிட வேறு மாதிரி உள்ளது என்று கூறினார் ஜோகோவிச்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயத்துக்கு பின் ஆடவந்த ஜோகோவிச் ஜப்பான் ஓப்பன் காலுறுதிக்கு தகுதி!
காயத்துக்கு பின் ஆடவந்த ஜோகோவிச் ஜப்பான் ஓப்பன் காலுறுதிக்கு தகுதி!
Advertisement