"பெரிய, சிறந்த வெற்றிகளே இலக்கு"- செரீனா வில்லியம்ஸ்

Updated: 28 December 2018 16:30 IST

23 முறை க்ராண்ட்ஸ்லாம் வென்ற செரீனா, குழந்தை பிறந்த பின்பு மார்ச் மாதம் களம் திரும்பினார்.

Serena Williams Eyes
காட்சிப்போட்டியில் தனது சகோதரி வீன்ஸிடம் 4-6, 6-3, 10-8 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.  © AFP

செரீனா வில்லியம்ஸ் "அமெரிக்க ஒப்பன் இறுதிப்போட்டி தோல்வி குறித்து விவாதிக்க விரும்பவில்லை" என்று கூறியுள்ளார். செப்டம்பரில் நடந்த அந்த நிகழ்வுக்கு பிறகு இப்போது தான் களம் திரும்புகிறார் செரீனா வில்லியம்ஸ். இது குறித்த கேள்விக்கு ''அதைவிட பெரிய மற்றும் சிறந்த விஷயங்களை நோக்கி நகர வேண்டும்'' என்றார். 

அமெரிக்க ஒப்பன் ஃபைனலில் உண்டான சர்ச்சையான நிகழ்வுகள் குறித்து பேசக்கூடாது என்றும், அப்படி பேசினால் அது இன்னும் பல நாட்களுக்கு விவாத பொருளாக மாறிவிடும் என்றும் செரீனா வில்லியம்ஸ் கூறினார். காட்சிப்போட்டியில் தனது சகோதரி வீன்ஸிடம் 4-6, 6-3, 10-8 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். 

பெண்கள் பிரிவில் 24 க்ராண்ட்ஸ்லாம் வென்ற மார்கரேட் கோர்ட்டின் சாதனையை முறியடிப்பதே தனது இலக்கு என்று 2019ம் ஆண்டுக்கான இலக்கை கொண்டுள்ளார். 2018ல் இந்தச் சாதனையை சமன் செய்ய கிடைத்த இரண்டு வாய்ப்புகளும் வீணானது.

23 முறை க்ராண்ட்ஸ்லாம் வென்ற செரீனா, குழந்தை பிறந்த பின்பு மார்ச் மாதம் களம் திரும்பினார். அதிலிருந்து வெறும் 7 போட்டி தொடர்களில் மட்டுமே கலந்து கொண்டார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தான் சரியான உடல் தகுதியுடன் இருப்பதாக கூறினார். விரைவில் இந்த ஆண்டு அந்தச் சாதனையை முறியடிக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?
விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?
கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் களத்தை தெறிக்கவிடப் போகும்
கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் களத்தை தெறிக்கவிடப் போகும் 'முர்ரே - செரீனா' ஜோடி!
நோவக், செரினா வெற்றி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்!
நோவக், செரினா வெற்றி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்!
Advertisement