கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் களத்தை தெறிக்கவிடப் போகும் 'முர்ரே - செரீனா' ஜோடி!

Updated: 03 July 2019 15:00 IST

2012 லண்டன் ஒலிம்பிக்கில் லவ்ரா ராப்சனுடன் இணைந்து விளையாடி வெள்ளி பதக்கம் வென்றார் முர்ரே.

Andy Murray, Serena Williams Form Wimbledon Mixed Doubles Dream Team
கலப்பு இரட்டையர் பிரிவில் ஆண்டி முர்ரே – செரினா வில்லியம்ஸ் இணை விளையாட உள்ளது © AFP

தற்போது விம்பிள்டன் போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் ஆண்டி முர்ரே – செரீனா வில்லியம்ஸ் இணை விளையாட உள்ளது.

இரண்டு முறை விம்பிள்டன் சாம்பியனான ஆண்டி முர்ரே, ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனான செரீனா உடன் ஜோடி சேர்ந்து விளையாடுவது ஏனைய கலப்பு இரட்டையர் ஜோடிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.

‘டென்னிஸ் கோர்ட் வெளியே நாங்கள் இருவரும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான். அது தான் அவரிடம் எனக்கு பிடித்தது. மேலும் அவர் பெண்களை மதிப்பவர். அவர் வாழ்வில் ஒரு வலிமையான பெண் இருப்பதை உணர முடியும்' என முர்ரே உடன் ஜோடி சேருவது குறித்து செரீனா கூறினார்.

‘எனக்கு கலப்பு இரட்டையர் விளையாட ஆசை. ஆனால் பல வீராங்கனைகள் என்னுடன் இணைந்து விளையாட விரும்பவில்லை' என முர்ரே தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் கிரிஸ்டன் பிளிப்கென்ஸ் உடன் ஜோடி சேர்ந்து விம்பிள்டன் கலப்பு இரட்டையரில் விளையாடியுள்ளார் முர்ரே.

2012 லண்டன் ஒலிம்பிக்கில் லவ்ரா ராப்சனுடன் இணைந்து விளையாடி வெள்ளி பதக்கம் வென்றார் முர்ரே.

1998 ஆம் ஆண்டில் மாக்ஸ் மிர்னியுடன் இணைந்து விம்பிள்டன் மற்றும் யூஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை செரீனா வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • 1998 ஆம் ஆண்டில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை செரீனா வென்றுள்ளார
  • 2012 ஒலிம்பிக்கில் ராப்சனுடன் இணைந்து வெள்ளி பதக்கம் வென்றார் முர்ரே.
  • முர்ரே ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் விளையாடுகிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் களத்தை தெறிக்கவிடப் போகும்
கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் களத்தை தெறிக்கவிடப் போகும் 'முர்ரே - செரீனா' ஜோடி!
“வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சிகிச்சை…”- கம்-பேக் குறித்து மனம் திறக்கும் ஆண்டி முர்ரே
“வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சிகிச்சை…”- கம்-பேக் குறித்து மனம் திறக்கும் ஆண்டி முர்ரே
Advertisement