
Australia Open 2019 Women's Final: நயோமி ஒசாக இரண்டாவது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் © AFP
ஜப்பானின் நயோமி ஒசாகா, செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவை 7-6(2), 5-7-6-4 என்ற செட் கணக்கில் வென்றார். பரபரப்பான இறுதிச் சுற்றில் முதல் செட் கணக்கில் நயோமி ஒசாகா 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது செட்டில் பெட்ரோ கிவிடோவா 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
பரபரப்பான இறுதி செட்டில் ஒசாகா வெற்றி பெற்று இறுதிச் சுற்றைக் கைப்பற்றினார். 5-3 என்ற செட் கணக்கில் பெட்ரா கிவிடோவை வீழ்த்தினார். நயோமி ஒசாக இரண்டாவது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். இவர் 2018 யூஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸை தோற்கடித்தார்.