Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்

Updated: 16 September 2019 13:43 IST

ATP Cup: இந்த புது ஏடிபி தொடரில் வெற்றி பெறுபவர்களுக்கு 22 மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர் (15 மில்லியன் அமெரிக்கன் டாலர்) பரிசு தொகையாக வழங்கப்படும்.

ATP Cup: Rafael Nadal In Perth, Novak Djokovic In Brisbane As Draw Made
ATP Cup: ரபேல் நடால் இந்த தொடரில் விளையாடவுள்ளார். © AFP

டென்னிஸ் விளையாட்டில் புதுமையான தொடர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ATP Cup என அழைக்கப்படும் இது, ஜனவரி 3, 2020 முதல் ஜனவரி 12, 2020 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது.  அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் முன்பாக நடக்கவுள்ள ஏடிபி கோப்பை தொடரில் 24 நாடுகள் பங்கேற்க உள்ளன.

24 நாடுகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதில் 8 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். இரண்டு ஒற்றையர், ஒரு இரட்டையர் ஆட்டம் என மூன்று ஆட்டங்கள் ஒரு போட்டிக்கு நடத்தப்படும். இந்த தொடரில் தரவரிசையில் டாப் 30 யில் இருக்கும் வீரர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.

சிட்னி, பிரிஸ்பேன், பெர்த் ஆகிய இடங்களில் இந்த தொடர் நடைபெறுகிறது. உலகின் நம்பர்.1 வீரரான நோவக் ஜோகோவிச்சின் செர்பியா அணி, பிரென்சு மற்றும் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்ளும்.

தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ரபேல் நடாலின் ஸ்பெயின் அணி ஜப்பான், ஜார்ஜியா அணியை பெர்த்தில் எதிர்க்கொள்ளும். ரோஜர் பெடரரின் சுவிஸர்லாந்த் அணி பெல்ஜியம், பிரிட்டனை சிட்னியில் எதிர்கொள்ளும்.

ரஷ்யா, இத்தாலி, யூஎஸ்ஏ அணிகள் பெர்த்திலும் ஆஸ்திரியா, க்ரோசியா, அர்ஜெண்டிணா அணிகள் சிட்னியிலும் ஜெர்மனி, கிரீஸ், கனடா, ஆஸ்திரேலியா அணிகள் பிரிஸ்பேனிலும் மோதி கொள்ளும்.

மீதி ஐந்து அணிகள் நவம்பர் 13 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த புது ஏடிபி தொடரில் வெற்றி பெறுபவர்களுக்கு 22 மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர் (15 மில்லியன் அமெரிக்கன் டாலர்) பரிசு தொகையாக வழங்கப்படும். மேலும் 750 ஒற்றையர், 250 இரட்டையர் ஏடிபி புள்ளிகள் வழங்கப்படவுள்ளது.

பிரிவு ஏ (பிரிஸ்பேன்) – செர்பியா, பிரென்சு, தென் ஆப்ரிக்கா +1 TBC

பிரிவு பி (பெர்த்) – ஸ்பெயின், ஜப்பான், ஜார்ஜியா +1 TBC

பிரிவு சி (சிட்னி) – சுவிஸர்லாந்த், பெல்ஜியம், பிரிட்டன் +1 TBC

பிரிவு டி (பெர்த்) - ரஷ்யா, இத்தாலி, யூஎஸ்ஏ +1 TBC

பிரிவு ஈ (சிட்னி) - ஆஸ்திரியா, க்ரோசியா, அர்ஜெண்டினா +1 TBC

பிரிவு எப் (பிரிஸ்பேன்) - ஜெர்மனி, கிரீஸ், கனடா, ஆஸ்திரேலியா

Comments
ஹைலைட்ஸ்
  • 24 நாடுகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்படும்.
  • 8 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
  • சிட்னி, பிரிஸ்பேன், பெர்த் ஆகிய இடங்களில் இந்த தொடர் நடைபெறுகிறது.
தொடர்புடைய கட்டுரைகள்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயத்துக்கு பின் ஆடவந்த ஜோகோவிச் ஜப்பான் ஓப்பன் காலுறுதிக்கு தகுதி!
காயத்துக்கு பின் ஆடவந்த ஜோகோவிச் ஜப்பான் ஓப்பன் காலுறுதிக்கு தகுதி!
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
"உன்னை நிச்சயம் கண்டுபிடிப்பேன்" -ரசிகரை முறைத்த ஜோகோவிச்
"உன்னை நிச்சயம் கண்டுபிடிப்பேன்" -ரசிகரை முறைத்த ஜோகோவிச்
"புல் கூட முன்பில்லாத உணர்வை வெளிப்படுத்தியது": விம்பிள்டன் வெற்றிக்கு பின் ஜோகோவிச்
"புல் கூட முன்பில்லாத உணர்வை வெளிப்படுத்தியது": விம்பிள்டன் வெற்றிக்கு பின் ஜோகோவிச்
Advertisement