கத்தார் ஓப்பன் அரையிறுதியில் ஆஞ்சேலிக் கெர்பர்!

Updated: 15 February 2019 17:34 IST

உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான பர்போரா ஸ்ரிகோவாவை 1-6, 6-2, 7-5 (7-4) என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார் கெர்பர்

Angelique Kerber Survives Scare To Reach Qatar Open Semi-Finals
சென்ற வருடம் விம்பிள்டன் பட்டம் வென்ற பிறகு ஆஞ்சேலிக் கெர்பர் தகுதி பெறும் முதல் அரையிறுதிப்போட்டி இதுவாகும்.  © AFP

மூன்று முறை க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆஞ்சேலிக் கெர்பர், கத்தார் ஓப்பன் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். 2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான பர்போரா ஸ்ரிகோவாவை 1-6, 6-2, 7-5 (7-4) என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அரையிறுதியில் அவர் கிகி பெர்டன்ஸ் அல்லது எலிஸ் மெர்டன்ஸை சந்திக்கலாம். 

ஜெர்மன் வீராங்கனையான கெர்பர், முதல் செட்டை இழந்து அடுத்த இரண்டு செட்களை கடுமையாக போராடி வெற்றி பெற்றார். சென்ற வருடம் விம்பிள்டன் பட்டம் வென்ற பிறகு அவர் தகுதி பெறும் முதல் அரையிறுதிப்போட்டி இதுவாகும். 

பெர்டன்ஸ் மற்றும் மெர்டன்ஸ் இடையேயான ஆட்டத்தின் முடிவுக்கு பின்னரே அரையிறுதியில் யாருடன் மோதுவார் என தெரியும். 

முன்னதாக உக்ரைனின் எலினா முதல்முறையாக அரையிறுதிக்கு கரோலினாவை 6-4, 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அவர் டோஹா அல்லது ஜூலியாவுடன் அரையிறுதியில் மோதுவார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஞ்சேலிக் கெர்பர் 1-6, 6-2, 7-5 (7-4) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்
  • அவர் பர்போரா ஸ்ரிகோவாவை வீழ்த்தினார்
  • கெர்பர், டோஹா அல்லது ஜூலியாவுடன் அரையிறுதியில் மோதுவார்
தொடர்புடைய கட்டுரைகள்
கத்தார் ஓப்பன் அரையிறுதியில் ஆஞ்சேலிக் கெர்பர்!
கத்தார் ஓப்பன் அரையிறுதியில் ஆஞ்சேலிக் கெர்பர்!
பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியின் சாம்பியன் ஜெர்மனியின் ஏஞ்சலிக்; செரினா தோல்வி
பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியின் சாம்பியன் ஜெர்மனியின் ஏஞ்சலிக்; செரினா தோல்வி
Advertisement