காஷ்மீர் பிரச்னை காரணமாக இடம் மாறுகிறதா டேவிஸ் கோப்பை?

Updated: 08 August 2019 16:34 IST

இந்த போட்டி செப்டம்பர் 14, 15ல் பாகிஸ்தான் தலைநகரில் நடைபெற இருந்தது. அதற்கான விசா வழிமுறைகள் துவங்கி விட்டது.

AITA May Request ITF To Consider Neutral Venue For Davis Cup Tie In Pakistan
முதலில் இந்தப் போட்டி பாகிஸ்தானில் உள்ள இஸ்லமாபாத்தில் தான் நடைபெறுவதாக இருந்தது.  © Instagram

பாகிஸ்தானோடு தற்போது நட்புறவு சரியில்லாத சூழலில் இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு டேவிஸ் கோப்பை போட்டியை பொதுவான இடத்தில் நடத்த உலக விளையாட்டு அமைப்பிடம் கேட்டுள்ளது. முதலில் இந்தப் போட்டி பாகிஸ்தானில் உள்ள இஸ்லமாபாத்தில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து காரணமாக அரசியல் சூழல் பாகிஸ்தானுடன் சரியில்லாத காரணத்தால் போட்டியை பொது இடத்துக்கு இந்தியா மாற்றக்கோரியுள்ளது.

இது நிச்சயம் போட்டியை பாதிக்கும். இன்னும் இரண்டு நாட்கள் பார்ப்போம் இல்லையென்றால் சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்திடம் தெரிவிப்போம் என்றார் இந்திய டென்னிஸ் கூட்டமைப்பில் செயலாளர். 

இந்த போட்டி செப்டம்பர் 14, 15ல் பாகிஸ்தான் தலைநகரில் நடைபெற இருந்தது. அதற்கான விசா வழிமுறைகள் துவங்கி விட்டது.

"அவர்கள் விசா தர மறுத்தால் நாங்கள் எப்படி பாகிஸ்தான் செல்வது. அவர்கள் ஒருவேளை அளித்தாலும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்குமா என்பதை உறுதி செய்வது சிக்கல்" என்றார்.

1964க்கு பிறகு டேவுஸ் கோப்பை அணியும், 2008க்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் செல்லவே இல்லை.

பாகிஸ்தான் பொது இடத்தில்தான் இந்தியாவுடன் ஆடி வருகிறது. ஒருவேளை டேவிஸ் கோப்பைக்கு பொது இடம் வேண்டும்மென்றால் அதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

சாலை வழியாக வீரர்களை அழைத்து செல்வதில் உடன்பாடில்லை. அணி வீரர்களை பதட்டப்படவும் வரும்பவில்லை என்று டென்னிஸ் சமேளன  செயலாளர் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலையை விளக்கியுள்ளதாகவும்,மத்திய அரசின் விளக்கத்துக்காக காத்திரிப்பதாகவும் கூறினார்.

இதேபோல் ஹாங்காங் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததற்காக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் 10000 டாலர் அபராதத்தையும், ஆசிய பிரிவில் கடைசி இடத்தையும் அளித்தது. 

ஒருவேளை இந்திய வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டால் பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம் உரிய பதிலளிக்க வேண்டும். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
காஷ்மீர் பிரச்சனை காரணமாக இடம் மாறுகிறதா டேவிஸ் கோப்பை?
காஷ்மீர் பிரச்சனை காரணமாக இடம் மாறுகிறதா டேவிஸ் கோப்பை?
புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து
புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து
டேவிஸ் கோப்பையில் பயஸின் இழப்பு இந்தியாவுக்கு பாதிப்பில்லை - மகேஷ் பூபதி
டேவிஸ் கோப்பையில் பயஸின் இழப்பு இந்தியாவுக்கு பாதிப்பில்லை - மகேஷ் பூபதி
Advertisement