55 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் இந்திய டென்னிஸ் அணி

Updated: 26 July 2019 11:51 IST

இஸ்லமபாத்தில் உள்ள பாகிஸ்தான் ஸ்போர்ட்ஸ் காம்பிளக்ஸில் வரும் செப்டம்பர் 14, 15 ஆகிய தினங்களில் இந்த போட்டி நடக்கவுள்ளது

After 1964, Pakistan All Set To Host India In Davis Cup
ரோகன் போப்பானா பாகிஸ்தானின் ஆய்ஸ்மான் உல் ஹாக் உடன் இரட்டையர் பிரிவில் சேர்ந்து விளையாடியுள்ளார் © PTI

55 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் சென்று டேவிஸ் கோப்பை தொடரில்  விளையாட உள்ளது இந்தியா டென்னிஸ் அணி. டேவிஸ் கோப்பை ஆசிய – ஓசானியா குருப் 1 க்கான போட்டிக்காக இந்தியா டென்னிஸ் அணி பாகிஸ்தான் வருவதாக பாகிஸ்தான் டென்னிஸ் பெடரேசன் அறிவித்துள்ளது.

கடைசியாக 1964 யில் பாகிஸ்தான் சென்ற இந்தியா அணியானது 4-0 என வெற்றி பெற்றது. பின் ஏப்ரல் 2006 யில் மும்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாடின.

இஸ்லமபாத்தில் உள்ள பாகிஸ்தான் ஸ்போர்ட்ஸ் காம்பிளக்ஸில் வரும் செப்டம்பர் 14, 15 ஆகிய தினங்களில் இந்த போட்டி நடக்கவுள்ளது. ஏற்கனவே இதே காம்பிள்க்ஸில் உஸ்பேகிஸ்தான், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளது பாகிஸ்தான்.

பாகிஸ்தானில் போட்டிகள் நடத்த தகுந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக சர்வதேச டென்னிஸ் பெடரேசனை சேர்ந்த குழு தெரிவித்தாக பிடிஎப் அதிகாரி தெரிவித்தார்.

பதற்றமான அரசியல் சூழ்நிலையில் இந்த டேவிஸ் கோப்பை போட்டி நடக்க இருக்கிறது. மீடியாவிற்கு பேட்டி அளிக்கையில் ஐடிஎப்யை சேர்ந்த ரிச்சர்ட் சைமன், ‘சமீபத்தில் ஐந்து டேவிஸ் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. நடக்க இருக்கும் டேவிஸ் கோப்பை போட்டிகளும் எவ்வித அச்சுறுதலும் இன்றி நடக்கும் என நம்புகிறேன்' என்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • 1964 யில் பாகிஸ்தான் சென்ற இந்தியா அணியானது 4-0 என வெற்றி பெற்றது
  • செப்டம்பர் 14, 15 அகிய தினங்களில் இந்த போட்டி நடக்கவுள்ளது
  • டேவிஸ் கோப்பை ஆசிய – ஓசானியா குருப் 1 க்கான போட்டி இதுவாகும்
தொடர்புடைய கட்டுரைகள்
ரோஹன் போபண்ணா கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில் நாக் அவுட் ஆனார்!
ரோஹன் போபண்ணா கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில் நாக் அவுட் ஆனார்!
ரோஹன் போபண்ணா-வெஸ்லி கூல்ஹோஃப் ஆகியோர் கதார் ஓபன் பட்டத்தை வென்றனர்!
ரோஹன் போபண்ணா-வெஸ்லி கூல்ஹோஃப் ஆகியோர் கதார் ஓபன் பட்டத்தை வென்றனர்!
காஷ்மீர் பிரச்சனை காரணமாக இடம் மாறுகிறதா டேவிஸ் கோப்பை?
காஷ்மீர் பிரச்சனை காரணமாக இடம் மாறுகிறதா டேவிஸ் கோப்பை?
55 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் இந்திய டென்னிஸ் அணி
55 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் இந்திய டென்னிஸ் அணி
ஆசிய விளையாட்டு போட்டியில் லியாண்டர் பயஸ் பங்கேற்பதில் குழப்பம்!
ஆசிய விளையாட்டு போட்டியில் லியாண்டர் பயஸ் பங்கேற்பதில் குழப்பம்!
Advertisement