
பாரா ஸ்விம்மர் பிரஷாந்தா கர்மாக்கர் இந்திய பாராலிம்பிக் குழுவில் இருந்து 3 வருடகாலம் நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜெய்புரில் நடைபெற்ற பெண்கள் நீச்சல் போட்டியின் பொது அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்ததற்காக தற்காலிக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டில் மேஜர் தியான் சந்த் விருது மற்றும் 2014 ஆம் ஆண்டில் பீம் விருது பெற்ற, மேலும் 2009 மற்றும் 2011 ஆம் சிறந்த ஸ்விம்மர் விருதை பெற்ற கர்மாகர் அவரது தவறான நடத்தை குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
"கர்மாகர் தனது உதவியாளரிடம் கேமிராவை கொடுத்து பெண் போட்டியாளர்களை வீடியோ எடுக்க தெரிவித்துள்ளார். இதை கண்டித்து போட்டியாளர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரில் கர்மகாரின் செயல் தெரிய வந்துள்ளது" என பாராலிம்பிக் குழு தெரிவித்தது.
"தன் உதவியாளர் மாட்டிக்கொண்ட பிறகும் டிரை-பாட் வைத்து மீண்டும் கர்மாகர் வீடியோ எடுத்துள்ளார். மேலும் வீடியோக்களை அளிக்க மறுத்துள்ளார்"
இதனை தொடர்ந்து போலீசார் கர்மாகரை கைது செய்து, வீடியோக்களை டெலீட் செய்த பின் வெளியில்விட்டது.
37வயதான கர்மாகர் அர்ஜென்டினாவில் நடைபெற்ற முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் கலந்துக்கொண்டு, பதக்கம் வென்றுள்ளார்.