''துப்பாக்கிசுடுதலுக்கு செக்'' காமென்வெல்த்தை புறக்கணிக்கும் இந்தியா!

Updated: 13 August 2019 16:19 IST

இந்தியர்கள் பலமாக இருக்கும் போட்டியான துப்பாக்கி சுடுதல் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 காமன்பெல்த் போட்டிகளில் இந்தியா 16 பதக்கங்களை வென்றிருந்தது.  

"No Space" For Shooting, Says Commonwealth Games Chief Despite Indias Boycott Threat
காமன்வெல்த் போட்டிகளின் தலைவர் லூயிஸ் மார்டின் 2022ல் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி இடம்பெறாது என்று கூறியுள்ளார். © Reuters

காமன்வெல்த் போட்டிகளின் தலைவர் லூயிஸ் மார்டின் 2022ல் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி இடம்பெறாது என்று கூறியுள்ளார். இந்தியா இந்த பர்மிங்ஹாமில் நடைபெறும் இந்த தொடரை புறக்கணிக்கவுள்ளது. இந்தியாவின் புறக்கணிப்புக்கு போட்டிகளின் விதிமுறைகளில் கொன்டு வரப்படும் மாற்றமே காரணம் என்று  கூறப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டிகளின் தலைவர் இங்கிலாந்து நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் 1974ம் ஆண்டிலிருந்து நடைபெற்ரு வரும் இந்த போட்டியில் முதல்முறையாக துப்பாக்கி சுடுதல் நிறுத்தப்படவுள்ளதாக கூறினார். இந்தியர்கள் பலமாக இருக்கும் போட்டியான துப்பாக்கி சுடுதல் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 காமன்பெல்த் போட்டிகளில் இந்தியா 16 பதக்கங்களை வென்றிருந்தது.  

இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் நரிந்திர பட்ரா செய்தியாளர்களிடம் பிர்மிங்ஹாம் காமன்வெல்த்தை இந்தியா புறக்கணிக்கப் போவதாக கூறினார். இந்த முடிவு விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எடுக்கப்பட்டதாக கூறினார். 

"துப்பாக்கி சுடுதல் ஒரு கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டிய போட்டி இல்லை என்றாலும், நாங்கள் அதற்காக தயாராகி வருகிறோம். அதற்கான போதிய வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது" என்றார். 

இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ பதில்கள் ஏதுமில்லை. 

இந்த இரு போட்டிகளையும் பிஸ்லே மற்றும் சர்ரேயில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இரு ஊர்களுக்குமிடையே 209 கி.மீ தொலைவு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இந்தியா - பிரிட்டன் இடையே பேச்சு வார்த்தைகள் அடுத்த கட்டத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ரெட் புல் ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்!
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ரெட் புல் ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்!
சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காங். எம்.பி கே. ஜெயக்குமார்...
சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காங். எம்.பி கே. ஜெயக்குமார்...
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
ஊக்கமருந்து உட்கொண்டதால் ரஷ்யாவை ஒலிம்பிக்கிலிருந்து தடை செய்தது WADA!
ஊக்கமருந்து உட்கொண்டதால் ரஷ்யாவை ஒலிம்பிக்கிலிருந்து தடை செய்தது WADA!
Advertisement