துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிரணி தங்கம் வென்று உலக சாதனை

Updated: 07 September 2018 17:20 IST

ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற இளவேனில் 631 புள்ளிகளை பெற்றிருப்பது புதிய உலக சாதனையாகும்.

Hriday Hazarika, Indian Women
© Twitter

புதுடெல்லி: உலக அளவிலான ஐ.எஸ்.எஸ்.எப். துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய மகளிரணி தங்கம் வென்றது.

சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்.) சார்பாக டெல்லியில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் மகளிர் 10 மீட்டர் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வளறிவன் (631), ஸ்ரேயா அகர்வால் (628.5) மற்றும் மனினி கவுசிக் ஆகியோர் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி மொத்தம் 1880.7 புள்ளிகளை குவித்து தங்கம் வென்றனர். இது புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது. ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற இளவேனில் 631 புள்ளிகளை பெற்றிருப்பது புதிய உலக சாதனையாகும்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் திறமையாக விளையாடிய இந்திய வீரர் ஹசாரிகா (17 வயது) 627.3 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார். ஈரானை சேர்ந்த முகம்மது அமீர் வெள்ளியை கைப்பற்றினார். ரஷியாவின் கிரிகோரி சமகோவுக்கு வெண்கலம் கிடைத்தது.

ஆண்கள் அணியில் ஹசாரிகா, திவ்யன்ஸ் பன்வார் மற்றும் அர்ஜுன் பபிதா ஆகியோர் மொத்தம் 1872.3 புள்ளிகளை குவித்தனர்.

சீனியர் ஆண்கள் பிரிவு 50 மீட்டர் போட்டியில் இந்திய வீரர் எவரும் இறுதி சுற்றுக்கு முன்னேறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பையில் தங்கம் வென்றார் இளவெனில் வாலறிவன்
உலகக் கோப்பையில் தங்கம் வென்றார் இளவெனில் வாலறிவன்
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவிடம் சமாதானம் பேசும் பிரிட்டிஷ்!
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவிடம் சமாதானம் பேசும் பிரிட்டிஷ்!
''துப்பாக்கிசுடுதலுக்கு செக்'' காமென்வெல்த்தை புறக்கணிக்கும் இந்தியா!
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: தங்கம் வென்று ஒலிம்பிக் தகுதி பெற்ற அபிஷேக் வர்மா
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: தங்கம் வென்று ஒலிம்பிக் தகுதி பெற்ற அபிஷேக் வர்மா
தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்: 3 தங்கம் வென்ற 13 வயது இஷா சிங்!
தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்: 3 தங்கம் வென்ற 13 வயது இஷா சிங்!
Advertisement