WWE மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார் 'தி ராக்'! ரசிகர்களுக்கு உருக்கமான பேட்டி!!

Updated: 05 August 2019 20:46 IST

தி ராக் என்ற புனை பெயருடன் அழைக்கப்படும் டுவேன் ஜான்சன் கடந்த 1997-ல் மல்யுத்தப்போட்டிக்கு வந்தார். 47 வயதாகும் அவர், ஹாலிவுட் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Dwayne Johnson, The Rock, Announces Retirement From WWE
ஃபோர்ப்ஸ் பத்திரிகை அளித்த தகவலின்படி அதிக சம்பளம் பெறும் நடிகர் தி ராக். © Twitter

WWE மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தி ராக் அறிவித்துள்ளார். டுவேன் ஜான்சன் என்பதை இயற்பெயராக கொண்ட அவர் தி ராக் என்ற பெயராலே பரவலாக அறியப்பட்டு வருகிறார். 

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று வரும் ராக், தற்போதுதான் முதன்முறையாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டுவேன் ஜான்சன் ஓய்வு குறித்த தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்தார்.

அந்த நிகழ்ச்சியில் ராக் பேசுகையில், 'மல்யுத்த போட்டிகளை மிஸ் செய்கிறேன். மல்யுத்தம் எனக்கு மிக மிக பிடித்தமானது. இப்போது அதில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஏனென்றால் எனக்கு சிறந்த தொழிலாக மல்யுத்தம் அமைந்தது. நான் அதிர்ஷ்டக்காரன். 

ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வரவேற்பு, நேரடியாக கண்டு களிக்கும் பார்வையாளர்கள் என மல்யுத்தக் களம் அருமையாக இருக்கும். இனிமேல் அது கிடைக்கப் போவது இல்லை. 

1997-ல்தான் முதன் முதலில் மல்யுத்த களத்திற்கு வந்தேன். அந்த நேரத்தில் எனக்கு கிடைத்த ஊதியம் மிக மிக அதிகமானது. மல்யுத்த வீரன் என்ற தொழிலை மிகவும் ரசித்து செய்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன் என்றால் அதற்கு மல்யுத்த போட்டிகள்தான் காரணம்' என்று கூறினார். 

கடைசியாக ரெஸ்ட் மேனிய 32 - 2016-ம் ஆண்டு நடந்தது. அதில் வயாட் பிரதர்ஸில் ஒருவரான எரிக் ரோவனை ராக் வீழ்த்தினார். 47 வயதாகும் அவர், தனது 'Fast & Furious Presents: Hobbs & Shaw' ஹாலிவுட் படத்தை விளம்பரம் செய்வதில் பிஸியாக உள்ளார்.  ஃபோர்ப்ஸ் பத்திரிகை அளித்த தகவலின்படி அதிக சம்பளம் பெறும் நடிகர் தி ராக்.

Comments
ஹைலைட்ஸ்
  • 'தி ராக்' சமீபத்தில் WWE யிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
  • தான் 'கம்-பேக்' பண்ணலாம் எனவும் தெரிவித்துள்ளார்
  • 2019 அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ராக்கை தேர்வு செய்தது போப்ஸ்
தொடர்புடைய கட்டுரைகள்
"Bodyshaming தான் என்னை வெற்றி பெற செய்துள்ளது" - பவர்லிஃப்டிங் சாம்பியன்
"Bodyshaming தான் என்னை வெற்றி பெற செய்துள்ளது" - பவர்லிஃப்டிங் சாம்பியன்
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
ரோட்டில் ஜிம்னாஸ்டிக் செய்த சிறுவர்களை பாரட்டிய ஒலிம்பிக் வீராங்கனை
ரோட்டில் ஜிம்னாஸ்டிக் செய்த சிறுவர்களை பாரட்டிய ஒலிம்பிக் வீராங்கனை
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவிடம் சமாதானம் பேசும் பிரிட்டிஷ்!
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவிடம் சமாதானம் பேசும் பிரிட்டிஷ்!
''துப்பாக்கிசுடுதலுக்கு செக்'' காமென்வெல்த்தை புறக்கணிக்கும் இந்தியா!
Advertisement