சஞ்சிதா ஷானுவின் தடையை நீக்கியது சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு!

Updated: 25 January 2019 16:25 IST

உலக சேம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக நவம்பர் 17,2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட சிறுநீர் சோதனையில், அவர் தடைசெய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.

Sanjita Chanu
சஞ்சிதா, 2018 காமன்வெல்த் போட்டிகளில் 53 கிலோ எடைபிரிவில் தங்கம் வென்றார். © AFP

காமன்வெல்த் தங்கம் வென்றவரும், இந்திய பளுதூக்கும் வீராங்கனையுமான சஞ்சிதா ஷானுவின் தடையை நீக்கிக் கொள்வதாக சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது. விசாரணை தகவல்களின் அடிப்படையில் இந்த தடையை நீக்குவதாக ஐடபிள்யூஎஃப்பின் இவா நைர்ஃபா தெரிவித்தார் 

இந்த முடிவை பலகட்ட விசாரணைகளுக்கு பின் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளது.

சஞ்சிதா, 2018 காமன்வெல்த் போட்டிகளில் 53 கிலோ எடைபிரிவில் தங்கம் வென்றார். உலக சேம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக நவம்பர் 17,2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட சிறுநீர் சோதனையில், அவர் தடைசெய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.

"அந்த சோதனை மாதிரி உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. ஆனால் அதனை இப்போது கேட்பது சரியல்ல" என்று சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பும் சஞ்சிதாவை ஆதரவு தெரிவித்துள்ளது.

"நவம்பர் இறுதியில் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஏப்ரல் மாதம் வெளியான முடிவு எப்படி சொல்ல முடியும்" என்று  சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு கூறியுள்ளது.

25 வயதான சஞ்சிதா ஷானுவுக்கு கடந்த மே மாதம் தடை விதிக்கப்பட்டது. தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • சோதனையில் தடைசெய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது
  • ஐடபிள்யூ எஃப், சஞ்சிதா ஷானுவின் தடையை நீக்கிக் கொள்வதாக அறிவித்தது
  • 25 வயதான சஞ்சிதா ஷானுவுக்கு கடந்த மே மாதம் தடை விதிக்கப்பட்டது
தொடர்புடைய கட்டுரைகள்
போதைப்பொருள் பரிசோதனையில் தோல்வியுற்ற பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை!
போதைப்பொருள் பரிசோதனையில் தோல்வியுற்ற பளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டு தடை!
சஞ்சிதா ஷானுவின் தடையை நீக்கியது சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு!
சஞ்சிதா ஷானுவின் தடையை நீக்கியது சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு!
ஊக்கமருந்து சர்ச்சையில் பளுதூக்கும் வீராங்கணை: மணிப்பூர் முதல்வர் ஆதரவு!
ஊக்கமருந்து சர்ச்சையில் பளுதூக்கும் வீராங்கணை: மணிப்பூர் முதல்வர் ஆதரவு!
Advertisement