பந்தயத்தின் போது சக போட்டியாளரின் ‘பிரேக்கை’ துண்டிக்க முயற்சி! பரபரப்பு வீடியோ

Updated: 11 September 2018 14:39 IST

ஐரோப்பாவில் உள்ள சான் மரீனோ நாட்டில் இரு சக்கர வாகனங்களுக்கான மோட்டோ2 பந்தயம் நடைப்பெற்று வருகிறது

Romano Romano Fenati Banned After Grabbing Rival
அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட ஃபெனாட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது © Twitter

ஐரோப்பாவில் உள்ள சான் மரீனோ நாட்டில் இரு சக்கர வாகனங்களுக்கான மோட்டோ2 பந்தயம் நடைப்பெற்று வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்ற போட்டியில், இத்தாலியின் ஸ்டெபனோ மன்சி முன்னிலை பெற்றிருந்தார். அதே போட்டியில் மற்றொரு இத்தாலி வீரரான ரொமானோ ஃபெனாட்டி பங்கேற்றார்

தொடர்ந்து முன்னிலை பெற்ற மன்சியை நெருங்கிய ஃபெனாட்டி, 220 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் மன்சியின் ஃப்ரெண்ட் ப்ரேக்கை இழுத்துள்ளார். இந்த சம்பவத்தினால் மன்சியின் வாகனம் சில நொடிகளுக்கு தடுமாறியது. பின்னர், சுதாரித்து கொண்டு போட்டியில் தொடர்ந்தார். அதிர்ஷ்டவசமாக, விபத்து ஏற்படாமல் போட்டியை தொடர்ந்தார்
 

 

23 லாப்ஸ் முடிந்த நிலையில், போட்டி நடுவர்கள் ஃபெனாட்டிக்கு ‘கருப்பு கொடி’ காண்பித்து போட்டியில் இருந்து வெளியேற்றினர். மேலும், அடுத்து நடக்க இருக்கும் இரண்டு போட்டிகளில் விளையாட ஃபெனாட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

போட்டியின் போது ஃபெனாட்டியின் இந்த தாக்குதல், சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. பல தரப்பில் இருந்தும் இதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன

இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு ஃபெனாட்டி மன்னிப்பு கோரியுள்ளார். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் எனவும் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விளையாட்டு உலகின் புகழ்பெற்ற
விளையாட்டு உலகின் புகழ்பெற்ற 'லாரஸ் விருது';இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் யார்?
உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா அனுமதி: ரைஃபிள் அசோஷியேஷன்!
உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா அனுமதி: ரைஃபிள் அசோஷியேஷன்!
ஃபார்முலா 1 பட்டத்தை வெல்லும் முனைப்பில் பெராரி
ஃபார்முலா 1 பட்டத்தை வெல்லும் முனைப்பில் பெராரி
சஞ்சிதா ஷானுவின் தடையை நீக்கியது சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு!
சஞ்சிதா ஷானுவின் தடையை நீக்கியது சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு!
வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் உ.பி. அரசு - வீராங்கனை வேதனை
வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் உ.பி. அரசு - வீராங்கனை வேதனை
Advertisement