உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா அனுமதி: ரைஃபிள் அசோஷியேஷன்!

Updated: 18 February 2019 18:11 IST

உலகக் கோப்பை போட்டிகள் பிப்ரவரி 20 துவங்கி 28 வரை நடைபெறவுள்ளது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முனோட்டமாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. 

Pulwama Attack: No Visa Denial For Pakistan Shooters Coming To India For World Cup
பாகிஸ்தானிலிருந்து ஒரு பயிற்சியாளர் மற்றும் இரண்டு வீரர்கள் பிப்ரவரி 20ம் தேதி இந்தியா வரவுள்ளனர். © AFP

இந்திய தேசிய ரைஃபிள் அசோஷியேஷனின் செயலாளர் ராஜிவ் பாட்டியா, "உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிக்காக இந்தியா வரும் பாகிஸ்தான் வீரர்களின் விசா மறுக்கப்படாது" என்று கூறினார். டெல்லியில் இந்த மாத இறுதியில் துவங்கும் போட்டிக்கு வரும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசாவுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் வழங்கிய அனுமதியை இஸ்லமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் ஆணையத்துக்கு அனுப்பிவிட்டதாகவும், இன்று அவர்களுக்கு விசா கிடைத்துவிடும் என்றும் ராஜிவ் பாட்டியா தெரிவித்தார். 

பாகிஸ்தானிலிருந்து ஒரு பயிற்சியாளர் மற்றும் இரண்டு வீரர்கள் இந்தியா வரவுள்ளனர். அவர்கள் பிப்ரவரி 20ம் தேதி இங்கு வந்தடைவார்கள் என்று கூறினார். 

அவர்களது பயண விவரங்கள் விசா கிடைத்தவுடன் வெளியாகும். உலகக் கோப்பை போட்டிகள் பிப்ரவரி 20 துவங்கி 28 வரை நடைபெறவுள்ளது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முனோட்டமாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. 

ஸ்ரீநகர் ஜம்மு நெடுங்சாலையில் 78 பேருந்துகளில் 2500க்கும் அதிகமான மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது 350 கிலோ வெடி பொருள்கள் நிரம்பிய கார் தாக்கி 40க்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்தனர்,  இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் - இ - முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. 

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா வரும் பாகிஸ்தான் வீரர்களின் விசா மறுக்கப்படாது: ராஜிவ் பாட்டியா
  • பிப்ரவரி 20ம் தேதி வீரர்கள் இங்கு வந்தடைவார்கள்: ராஜிவ் பாட்டியா
  • இந்திய தேசிய ரைஃபிள் அசோஷியேஷனின் செயலாளர் விசா அனுமதித்துள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
"Bodyshaming தான் என்னை வெற்றி பெற செய்துள்ளது" - பவர்லிஃப்டிங் சாம்பியன்
"Bodyshaming தான் என்னை வெற்றி பெற செய்துள்ளது" - பவர்லிஃப்டிங் சாம்பியன்
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
ரோட்டில் ஜிம்னாஸ்டிக் செய்த சிறுவர்களை பாரட்டிய ஒலிம்பிக் வீராங்கனை
ரோட்டில் ஜிம்னாஸ்டிக் செய்த சிறுவர்களை பாரட்டிய ஒலிம்பிக் வீராங்கனை
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவிடம் சமாதானம் பேசும் பிரிட்டிஷ்!
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவிடம் சமாதானம் பேசும் பிரிட்டிஷ்!
''துப்பாக்கிசுடுதலுக்கு செக்'' காமென்வெல்த்தை புறக்கணிக்கும் இந்தியா!
Advertisement