விளையாட்டு உலகின் புகழ்பெற்ற 'லாரஸ் விருது';இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் யார்?

Updated: 19 February 2019 16:12 IST

சிறந்த அணிகளுக்கான விருதினை 2018 கால்பந்து உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் ஆண்கள் கால்பந்து அணி வென்றது.

Laureus World Sports Awards: Novak Djokovic And Simone Biles Win Sports People Of Year Awards
சிறந்த வீரர் விருதை வென்ற நோவக் ஜொகோவிக் © AFP

விளையாட்டு உலகில் உயர்ந்த விருதாக கருதப்படுவது லாரஸ் விருது. ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், வீராங்கனை உட்பட பல பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படும். இந்த வருடதிற்கான லாரஸ் விருதை வென்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

காயத்தில் இருந்து மீண்டு வந்து சென்ற ஆண்டு இரண்டு கிராண்டு ஸ்லாம் பட்டங்களை வென்ற நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவக் ஜொகோவிக், லாரஸ் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை வென்றார். நோவக் வெல்லும் நான்காவது லாரஸ் விருது இதுவாகும்.

‘சென்ற வருடம் எனக்கு மறக்க முடியாதது. காயத்தில் இருந்து மீண்டு விம்பிள்டண் மற்றும் யூ.எஸ் ஓபனை வென்றது என்னால் மறக்கவே முடியாது' என நோவக் ஜொகோவிக் தெரிவித்தார்.

சிறந்த வீராங்கனைக்கான விருதினை அமெரிக்கவின் 21 வயதான ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமோன் பில்ஸ் வென்றார். சென்ற ஆண்டும் லாரஸ் சிறந்த வீராங்கனை விருதினை பில்ஸ் தான் வென்றிருந்தார்.

சிறந்த அணிகளுக்கான விருதினை 2018 கால்பந்து உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் ஆண்கள் கால்பந்து அணி வென்றது.

திருப்புமுனை ஏற்படுத்தியவர் விருதினை ஜப்பானைச் சேர்ந்த நயோமி ஒசாகா வென்றார். பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஒசாகா, யூ.எஸ் ஓபன் மற்றும் ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் ஆவார்.

சிறந்த ‘கம்-பேக்' வீரருக்கான விருதை கோல்ஃப் ஜாம்பவன் டைகர் உட்ஸ் பெற்றார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான விருதினை ஸ்லோவேகியாவின் ஹென்ரித்தா ஃபர்கசோவா தட்டிச் சென்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருதினை அர்சனல் கால்பந்து அணியின் முன்னாள் மேலாளரான அர்ச்னே வெங்கர் வென்றார். 1996 முதல் 2018 வரை அர்சனல் கால்பந்து அணியின் மேலாளராக பணிபுரிந்தவர் வெங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • சிறந்த விளையாட்டு வீரர்கான விருதை நோவக் வென்றார்
  • சிறந்த அணிகளுக்கான விருதினை பிரான்ஸ் ஆண்கள் கால்பந்து அணி வென்றது.
  • கம்-பேக்’ வீரருக்கான விருதை கோல்ப் ஜாம்பவன் டைகர் வுட்ஸ் பெற்றார்.
தொடர்புடைய கட்டுரைகள்
'வி ஆர் தி சாம்பியன்ஸ்' பாடலின் பியானோ வாசிப்பது போல் நடித்த நோவக் ஜோகோவிச்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
Advertisement