ரோட்டில் ஜிம்னாஸ்டிக் செய்த சிறுவர்களை பாரட்டிய ஒலிம்பிக் வீராங்கனை

Updated: 05 September 2019 18:05 IST

இந்திய பள்ளி மாணவர்கள் ஜாஷிகா கான் மற்றும் முகமது அசாஜுதின் ஆகியோரை ஐந்துமுறை ஜிம்னாஸ்டிக்கில் ஒலிம்பிக் தங்கம் வென்ற நடியா காமென்ஸி பாராட்டியுள்ளார்.

Government Takes Charge Of 2 Kolkata Children, Praised By Nadia Comaneci
11 வயதான ஜாஷிகா கான் மற்றும் 12 வயதான முகமது அசாஜுதின் பயிற்சி தேர்வுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். © Twitter

இந்திய பள்ளி மாணவர்கள் ஜாஷிகா கான் மற்றும் முகமது அசாஜுதின் ஆகியோரை ஐந்துமுறை ஜிம்னாஸ்டிக்கில் ஒலிம்பிக் தங்கம் வென்ற நடியா காமென்ஸி பாராட்டியுள்ளார். இதற்கு காரணம் இந்த மாணவர்களின் ஜிம்னாஸ்டிக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதே ஆகும். இதனை நடினா ஆஸம் இன்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த 15 நொடி வீடியோவில் பள்ளி மாணவர்கள் இருவரும் பள்ளி சீருடையில் சமர்சால்ட் அடித்து அசத்தியிருப்பார்கள். இவர்களை அடையாளம் கண்ட இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் முழுநேர பயிற்சியில் இணைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நடியாவின் பாராட்டு கிடைத்த வேளையிலேயே கொல்கத்தாவில் உள்ள விளையாட்டுத்துறையும் அவர்கள் தங்கி பயிற்சி பொற உதவும் என்று அதன் மண்டல இயக்குநர் மன்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

11 வயதான ஜாஷிகா கான் மற்றும் 12 வயதான முகமது அசாஜுதின் பயிற்சி தேர்வுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரிஜ்ஜு, நடியா இந்த சிறுவர்களை அறிமுகம் செய்து வைத்தது பாராட்டுக்குறியது. 1976ம் ஆண்டு ஒலிம்பிக்கில்க் 10 முழுப்புள்ளிகளுடன் பட்டம் வென்றவர் நடியா என்றார். 

57 வயதான நடியா ஜிம்னாஸ்டிக் பிரிவில் 1976 மற்றும் 1980ல் 5 பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ரெட் புல் ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்!
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ரெட் புல் ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்!
சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காங். எம்.பி கே. ஜெயக்குமார்...
சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காங். எம்.பி கே. ஜெயக்குமார்...
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
ஊக்கமருந்து உட்கொண்டதால் ரஷ்யாவை ஒலிம்பிக்கிலிருந்து தடை செய்தது WADA!
ஊக்கமருந்து உட்கொண்டதால் ரஷ்யாவை ஒலிம்பிக்கிலிருந்து தடை செய்தது WADA!
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் அதானு தாஸ் வெண்கலம் வென்றார்
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் அதானு தாஸ் வெண்கலம் வென்றார்
Advertisement