தேசிய விளையாட்டு தினம் கொண்டாட காரணமான ஹாக்கி ஜாம்பவான் இவர் தான்!

Updated: 29 August 2018 13:01 IST

மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்தை கெளரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது

Major Dhyan Chand:
© PTI

ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்தை கெளரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, தேசிய விளையாட்டு தின வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இன்றைய நாளில், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு விருதுகள் அளிக்கப்படுகின்றன.

“அனைத்து விளையாட்டு ஆர்வலர்களுக்கும் வீரர்களுக்கும் தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து விளையாட்டுகளில் பங்கெடுக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

அலகாபாத்தில், 1905 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 ஆம் தேதி பிறந்த தியான் சந்த், இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர், ஹாக்கி விளையாட்டின் மீது கொண்ட ஈடுபாட்டால், தொடர்ந்து ஹாக்கி விளையாடி வந்தார்

இந்திய அணி கேப்டனாக இருந்த தியான் சந்த், 1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். 22 ஆண்டுகளுக்கு ஹாக்கி விளையாடிய அவர், 400க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்

குறிப்பாக, 1936 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிராக நடைப்பெற்ற ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில், 8-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியில், தியான் சந்த் 3 கோல்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஹாக்கி விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபின், பட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில் முதன்மை ஹாக்கி பயிற்சியாளராக பணியாற்றினார்

ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவானாக விளங்கும் தியான் சந்தின் பிறந்தநாளில், தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுவது மேலும் சிறப்பு.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவிடம் சமாதானம் பேசும் பிரிட்டிஷ்!
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவிடம் சமாதானம் பேசும் பிரிட்டிஷ்!
''துப்பாக்கிசுடுதலுக்கு செக்'' காமென்வெல்த்தை புறக்கணிக்கும் இந்தியா!
WWE மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார்
WWE மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார் 'தி ராக்'! ரசிகர்களுக்கு உருக்கமான பேட்டி!!
தடைகளை தகர்த்து தடம் பதித்த டுட்டி சந்த்...!
தடைகளை தகர்த்து தடம் பதித்த டுட்டி சந்த்...!
"பதக்கம் வென்றால் பறக்கலாம்" மாணவர்களை ஊக்குவிக்கும் விளையாட்டு ஆசிரியர்
"பதக்கம் வென்றால் பறக்கலாம்" மாணவர்களை ஊக்குவிக்கும் விளையாட்டு ஆசிரியர்
Advertisement