ஃபார்முலா 1 பட்டத்தை வெல்லும் முனைப்பில் பெராரி

Updated: 16 February 2019 17:37 IST

பெராரி அணி வீரர் ஒருவர் கடைசியாக ஃபார்முலா 1 பட்டத்தை வென்றது 2007 ஆம் ஆண்டில் தான்

F1: Ferrari Launch New SF90 Looking To End F1 Title Drought
பெராரியின் புதிய எஸ்எப்90 கார் © Twitter

பெராரி அணி இல்லாமல் ‘ஃபார்முலா 1' கிடையாது என கூறினால் மிகையாகாது. அந்த அளவிற்கு ஃபார்முலா 1 பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தியது பெராரி அணி.

ஆனால் கடந்த 10 ஆண்டுகள் பெராரி அணிக்கு பின்னடைவாகவே அமைந்தது.

பெராரி அணி வீரர் ஒருவர் கடைசியாக ஃபார்முலா 1 பட்டத்தை வென்றது 2007 ஆம் ஆண்டில் தான். கிமி ரெய்கானன் தான் பெரார் அணிக்காக களமிறங்கி 2007 ஆம் ஆண்டில் பட்டம் வென்றார்.

அணிகளுக்கான பட்டத்தை 2008 ஆம் ஆண்டில் கடைசியாக வென்றது பெராரி. அதன் பின் மெர்சிடிஸ் அணிதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அதனால் இந்த ஆண்டு கண்டிப்பாக பட்டம் வெல்லும் முனைப்புடன் இருக்கிறது பெராரி.

இதற்காக எஸ்எப்90 காரை புதியதாக அறிமுகம் செய்துள்ளது பெராரி.

‘இந்த புது காரை ஓட்ட ஆர்வமாக உள்ளேன்' என பெராரி அணிக்காக இந்த ஆண்டு களமிறங்கும் வெட்டல் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பெராரி அணிக்காக வெட்டல் மற்றும் 21 வயதான சார்லஸ் லெக்ரக் களமிறங்குகிறார்கள்.

தனி நபர் பட்டத்தை வெல்ல வெட்டல் மற்றும் ஹாமில்டன் இடையே கடும் போட்டி இருக்கும் என எண்ணப்படுகிறது.

அணிகளுக்கான பட்டம் வெல்லும் முனைப்பில் மெர்சிடிஸ் உடன் பெராரி மல்லுக்கட்டும்.

Comments
ஹைலைட்ஸ்
  • எஸ்எப்90 காரை புதியாதாக அறிமுகம் செய்துள்ளது பெராரி.
  • பெராரி அணிக்காக வெட்டல் மற்றும் சார்லஸ் லெக்ரக் களமிறங்குகிறார்கள்.
  • அணிகளுக்கான பட்டத்தை 2008 ஆம் ஆண்டில் கடைசியாக வென்றது பெராரி
தொடர்புடைய கட்டுரைகள்
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
ஃபார்முலா 1 பட்டத்தை வெல்லும் முனைப்பில் பெராரி
ஃபார்முலா 1 பட்டத்தை வெல்லும் முனைப்பில் பெராரி
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
பெர்ணான்டோவின் ஃபேர்வல்: க்ராண்ட்பிரிக்ஸில் பட்டம் வென்றார் ஹாமில்டன்
பெர்ணான்டோவின் ஃபேர்வல்: க்ராண்ட்பிரிக்ஸில் பட்டம் வென்றார் ஹாமில்டன்
2019 ஃபார்முலா ஒன் ஒப்பந்தம்: ஃபெராரியில் இருந்து ரெயின்கோனன் நீக்கப்படலாம்
2019 ஃபார்முலா ஒன் ஒப்பந்தம்: ஃபெராரியில் இருந்து ரெயின்கோனன் நீக்கப்படலாம்
Advertisement