கனேடியன் கிராண்ட் பிரிக்ஸ் 2018: பட்டத்தை வென்றார் செபஸ்டின் வெட்டல்

Updated: 11 June 2018 17:12 IST

2004 ஆம் ஆண்டிற்கு பிறகு, கனடாவில் பெர்ராரிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இது

Canadian Grand Prix 2018: Sebastian Vetttel Claims 50th Career Win, Goes Top In Title Race
கனேடியன் கிராண்ட் பிரிக்ஸ் சாமியன் பட்டம் வென்றதன் மூலம், செபஸ்டின் வெட்டல் தனது 50வது வெற்றியை பதிவு செய்துள்ளார். © AFP

கனேடியன் கிராண்ட் பிரிக்ஸ் சாமியன் பட்டம் வென்றதன் மூலம், செபஸ்டின் வெட்டல் தனது 50வது வெற்றியை பதிவு செய்துள்ளார். நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியைச் சேர்ந்த செபஸ்டின் வெட்டல், பந்தய க‌ளத்தில், தனது பெர்ராரி காரை அதிரடியாக செலுத்தியதன் மூலம், 54வது போல் நிலையில் தொடங்கிய வெட்டல், மெர்சிடஸின் பின் வால்டேரி பொட்டாஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்த ரெட் புல்லின் மாக்ஸ் வெர்ஸ்டாப்பனை பின்னுக்கு தள்ளி சாம்பியன் பட்டம் வென்றார்.

மூன்றாவது வெற்றியின் மூலம், இந்த சீசனில் 121 புள்ளிகள் எடுத்து முன்னேறியுள்ளார். மேலும், சர்க்யூட் கில்ஸ் வில்லெவென்யூவில் ஏழாவது வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த, நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டனின் கனவு தகர்க்கப்பட்டது. அவர் 120 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

2004 ஆம் ஆண்டிற்கு பிறகு, கனடாவில் பெர்ராரிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இது. மேலும், 17 ஆண்டுகளில் முதல் போல் வென்றுள்ளனது பெர்ராரி. மேலும். கனடாவில் வெட்டல் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளார், கடந்த 2014 ஆம் ஆண்டு ரெட்புல்லிற்கு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிக்கார்டோ, கடைசி வளைவில் அதிவேகமான ஓட்டத்தை பதிவு செய்தார். அதனால், ஹாமில்டனை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை பெற்றார். பெர்ராரியின் பின் கிமி ரேய்க்கோனன் ஆறாவது இடம் பெற்றார்.

ரெனோ ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்லோஸ் செயின்ஸ், போர்ஸ் இந்தியாவின் பிரெஞ்சின் எஸ்டிபன் ஓகோன், சாபரின் சார்லஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி ரெனானோ குழுவை சேர்ந்த ஜெர்மனியின் நிகோ ஹல்கென்பெர்க் ஏழவது இடம் வென்றார்.

"நேற்று நான் கூறியதை போல, பெர்ராரிக்கு இது முக்கியமான களமாகும். பல ஆண்டுகளாக இந்த இடத்தில் வெற்றியை பதிவு செய்யாதிருந்த பெர்ராரிக்கு இது பெரிய வெற்றியாகும். அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இன்னும் இந்த ஆண்டிற்கான பல போட்டிகள் உள்ளதால், இந்த வெற்றி எனக்கு உத்வேகம் தருவதாக‌ அமைந்துள்ளது" என்றார் செபஸ்டின் வெட்டல்.


40 ஆண்டுகளுக்கு முன்னர் கில்ஸ் வில்லெவென்யூ பெர்ராரிக்காக தனது முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்ததை தொடர்ந்து இன்று இந்த வெற்றி அமைந்துள்ளதால் மிகவும் சிறப்பானது எனவும் கூறினார்.

20 டிகிரி செல்சியஸில் சரியான நிலைகளில் ஆட்டம் தொடங்கியது. வெட்டலின் நான்காவது கனேடியன் போலில் இருந்து, சரியான ஆட்டத்தை தொடர்ந்தார். பின்னர் இருந்த பொட்டாஸ் இரண்டாம் நிலையில் இருந்து வெர்ஸ்டாப்பனை பின்னுக்கு தள்ள முயன்று கொண்டிருந்தார்.

ஹாமில்டன் நான்காவது இடத்தில் தொடர்ந்து வந்தார், ரெய்க்கோனென்னை பின்னுக்கு தள்ளி முன்னேறிய ரிக்கார்டோ, வளைவின் பாதியில் பிரென்டன் ஹார்ட்லியின் டோரோ ரோஸோ மற்றும் லான்ஸ் ஸ்ட்ரோல்ஸ் வில்லியம்ஸ் மோதி கொண்டனர்.

ஸ்ட்ரோலில் வண்டி பஞ்சர் ஆனதால், தளத்தில் இருந்து வெளியேறினார். அப்போது டோரோ ரோஸ்ஸோவின் வண்டி தூக்கிப்போடப்பட்டது. இருவரும் காயங்கள் இன்றி பிழைத்தனர்.

ஹாமில்டனின் வாகனத்தின் இயந்திர கோளாரால், பின்னடைவில் இருந்தார். பின்னர், 33 வது வளையத்தின் போது ரெய்கோனன் வேகம் குறையும் போது ஹாமில்டன் முன்னேறி ஐந்தாவது இடத்தில் நிறைவு செய்தார்.

வெட்டல் மற்றும் பொட்டாஸ் 24 நொடிகள் முன்னிலை பெற்ற நிலையில், பொட்டாஸ் 37வது வளையத்தை முதலாக கடந்தார்.

40வது வளையத்தில் முன்னேறிய வெட்டல், 5.7 நொடிகள் முன்னிலை பெற்று,பொட்டாஸ், வெர்ஸ்டாப்பன், ரிக்கார்டோம் ஹாமில்டன் மற்றும் ரெயின்கோனன் ஆகியோர் அடுத்தடுத்து வந்தனர்.

42வது வளைவின் இறுதியில், பெர்னாண்டோ அலன்சோவின் 300வது கிராண்ட் பிரிக்ஸ் வாரம் முடிவுக்கு வந்தது. 10வது இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அலன்சோவின் வண்டி, பவர் இல்லாததால் நின்றது. இயந்திர கோளாறுக்காக மெக்லெரன் பொறியாளர் மன்னிப்பு கோரினார்

பரபரப்பான ஆட்டத்தில், வெறும் இரண்டு நொடிகள் வித்தியாசத்தில் சென்று கொண்டிருந்தனர் வெட்டல் மற்றும் பொட்டாஸ். இறுதியில் அதிரடி வெற்றியை வெட்டல் பதிவு செய்தார்.
 

Comments
ஹைலைட்ஸ்
  • செபஸ்டின் வெட்டல் தனது 50வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
  • 2004 ஆம் ஆண்டிற்கு பிறகு, கனடாவில் பெர்ராரிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி
  • இந்தாண்டிற்கான முன்னனி சாம்பியன் பட்டத்தை வெட்டல் பெற்றுள்ளார்.
தொடர்புடைய கட்டுரைகள்
கனேடியன் கிராண்ட் பிரிக்ஸ் 2018: பட்டத்தை வென்றார் செபஸ்டின் வெட்டல்
கனேடியன் கிராண்ட் பிரிக்ஸ் 2018: பட்டத்தை வென்றார் செபஸ்டின் வெட்டல்
கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் 2018 : சாம்பியன் பட்டம் வெல்ல லூயிஸ் ஹாமில்டன் தீவிரம்
கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் 2018 : சாம்பியன் பட்டம் வெல்ல லூயிஸ் ஹாமில்டன் தீவிரம்
Advertisement