Listen to the latest songs, only on JioSaavn.com
 

"Bodyshaming தான் என்னை வெற்றி பெற செய்துள்ளது" - பவர்லிஃப்டிங் சாம்பியன்

Updated: 18 October 2019 10:38 IST

ஆரத்தி இப்போது கோவையில் ஆசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உலக பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2020 க்கு தயாராகி வருகிறார்.

Bodyshamed Chennai Woman Becomes Mary Kom Of Powerlifting Winning 5 Commonwealth Gold Medals
சென்னையை சேர்ந்த ஆரத்தி அருண் இப்போது பவர்லிஃப்ட்டிங்கில் மேரி கோம் என்று அழைக்கப்படுகிறார். © NDTV

கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்ற பிறகு சென்னையை சேர்ந்த ஆரத்தி அருண் இப்போது பவர்லிஃப்ட்டிங்கில் மேரி கோம் என்று அழைக்கப்படுகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு உடல் பருமன் காரணத்தால் கிண்டல் செய்யப்பட்டுள்ளார். 44 வயதான அவர் ஒரு பல் அறுவை சிகிச்சை நிபுணர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் பவர் லிஃப்டிங் குறித்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பாடி ஷேமிங் காரணமாக தான், இரண்டு குழந்தைகளின் தாய் பவர் லிஃப்ட்டைத் தொடர ஒரு ஆர்வத்தைத் தூண்டியது என்று கூறுகிறார். "என்னுடைய இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நான் மிகவும் பருமன் ஆனேன். நான் அப்போது 80 கிலோவாக இருந்தேன். என் உடலுக்கு ஏற்ற உடைகள் கிடைக்கவில்லை. நான் பெரிய சைஸ் உடைகள் பயன்படுத்தும்போது அனைவரும் என்னை கிண்டல் செய்தனர். என் நம்பிக்கை மிகக் குறைவாக இருந்தது". ஜிம்மில் கூட ஆரம்பத்தில் பலர் "இது ஒரு இரும்பு விளையாட்டு, திருமணமான பெண்ணின் விளையாட்டு அல்ல" என்று கூறி அவரை நிராகரித்ததாக அவர் கூறுகிறார். ஆனால் எந்தவித குழப்பமும் இல்லாமல், திருமணமோ அல்லது எடை அதிகரிப்போ பெண்களுக்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை நிரூபிக்க அவர் விரும்பினார். "நான் ஒரு பெண் மற்றும் திருமணமானவர் என்று நமக்கு மட்டுமே தெரியும் என்று மட்டுமே அவர்களிடம் சொன்னேன். ஆனால் அங்குள்ள எடைக்கு எதுவும் தெரியாது. அது என்னை சமமாக நடத்தப் போகிறது" என்றுள்ளார்.

மற்ற பட்டங்களைத் தவிர, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹாங்காங்கில் நடைபெற்ற 72 கிலோ எம்1 பிரிவில் ஆரத்தி ஆசிய பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பை வென்றார்.

சமீபத்திய விருதுகள் அவரை ஒரு முன்மாதிரியாகவும், பலருக்கு உத்வேகமாகவும் ஆக்கியுள்ளன. தமிழக முதல்வர் இ.பி.எஸ் அவரை கவுரவித்துள்ளார். "மக்கள் இப்போது என்னையும் என் விளையாட்டையும் அங்கீகரிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பெண்கள் திருமணமானதும் தங்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை. இப்போது என்னைப் பார்த்து அவர்கள் உந்துதல் பெறுகிறார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இருப்பினும் விளையாட்டு இன்னும் சரியான அங்கீகாரத்தைப் பெறவில்லை என்று அவர் நினைக்கிறார். "சில விளையாட்டுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பவர்லிஃப்ட்டுக்கு அங்கீகாரம் வேண்டும். இந்திய அரசு இதை 1975ல் அறிமுகப்படுத்தியது. பவர் லிஃப்ட்டில் நல்ல செயல்திறனுக்காக அரசு வேலைகள், மருத்துவ மற்றும் பொறியியல் இடங்களையும் மக்கள் பெறுகிறார்கள். ஆனால் விழிப்புணர்வு மிகக் குறைவு" என்றார் அவர்.

ஆரத்தி இப்போது கோவையில் ஆசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உலக பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2020 க்கு தயாராகி வருகிறார்.

அவரைப் போன்ற பெண்களுக்கு அவளுடைய அறிவுரை என்ன என்று கேட்டபோது, ​​"பெரியதாக கனவு காணுங்கள், உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள். நீங்கள் எத்தனை முறை கீழே விழுகிறீர்கள் என்பதை விட, நீங்கள் எவ்வளவு வலிமையாக எழுந்திருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். உங்கள் இலக்கை நோக்கி நகருங்கள். உங்கள் திட்டத்தை மாற்றங்கள், உங்கள் பாதையை அல்ல" என்றார்.

தனது பல் அறுவை சிகிச்சை கணவர், கல்லூரிக்குச் செல்லும் மகன் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மகள் தன்னை மிகவும் ஆதரிக்கிறார்கள் என்று ஆரத்தி கூறுகிறார். பவர்லிஃப்டர் மனைவி மற்றும் அம்மாவுக்கு அவர்கள் பயப்படுகிறார்களா? "நான் ஒரு அடிப்பேன் என்று அடிக்கடி சொல்கிறேன், ஆனால் அவர்கள் பயப்படவில்லை. அவர்கள் என்னைப் பற்றி பெருமைப்படுகிறார்கள்" என்றார் ஆரத்தி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பாகிஸ்தான் ஸ்குவாஷ் வீரர் அசாம் கான் கோவிட்-19 காரணமாக உயிரிழந்தார்!
பாகிஸ்தான் ஸ்குவாஷ் வீரர் அசாம் கான் கோவிட்-19 காரணமாக உயிரிழந்தார்!
“ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைப்பது தவிர்க்க முடியாதது” - ஜப்பான் பிரதமர்!
“ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைப்பது தவிர்க்க முடியாதது” - ஜப்பான் பிரதமர்!
ஜப்பான் ஒலிம்பிக் குழு துணைத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு!
ஜப்பான் ஒலிம்பிக் குழு துணைத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு!
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ரெட் புல் ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்!
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ரெட் புல் ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்!
Advertisement