Listen to the latest songs, only on JioSaavn.com
 

“ஒரு தோல்வி முழு நம்பிக்கையையும் அழித்து விடாது” - விராட் கோலி!

Updated: 24 February 2020 14:28 IST

தனது அணியின் ஒரு டெஸ்ட் போட்டியின் தோல்வி ஏன் முடிவாக கருதப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று கோலி கூறினார்.

NZ vs IND: Virat Kohli Says Cant Help If People Want To Make A Big Deal After Crushing 10-Wicket Loss To New Zealand
இந்த ஆட்டத்தில் விராட் கோலி மொத்தம் 21 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. © AFP

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆனால், விராட் கோலி,10 விக்கெட் தோல்வியை ஒரு சிலர் "பெரிய விஷயம்" செய்ய விரும்பினால் "உதவ முடியாது" என்று கூறினார். திங்கட்கிழமை பேசின் ரிவர்ஸில் நடந்த போட்டியை நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இது இந்தியாவின் முதல் தோல்வியாகும். “நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் மக்கள் அதை பெரிய விஷயமாக மாற்ற விரும்பினால், அதிலிருந்து ஒரு மலையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால், நாங்கள் அப்படி நினைக்காததால் அதற்கு உதவ முடியாது” என்று போட்டிக்கு பின் விராட் கோலி கூறினார்.

தனது அணியின் ஒரு டெஸ்ட் போட்டியின் தோல்வி ஏன் உலகின் முடிவாக கருதப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று கோலி கூறினார்.

“சிலருக்கு இது உலகின் கடைசி விஷயமாக இருக்கிறது, ஆனால் அது அப்படி இல்லை. எங்களை பொறுத்தவரை இது ஒரு கிரிக்கெட் போட்டியை நாங்கள் இழந்துள்ளோம், இதிலிருந்து மீண்டு நாங்கள் முன்னேறி வருவோம்,” என்றார் கோலி.

தோல்வியை ஏற்றுகொள்வதே ஒரு அணியின் தன்மையை வெளிப்படுத்துகிறது என்று உலகின் சிறந்த பேட்ஸ்மேன் கூறினார்.

“நன்றாக விளையாடினால் தான் வெற்றி பெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். சர்வதேச அளவில் அணிகள் வந்து உங்களை செல்லும், எதுவும் எளிதாக கிடைக்காது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே உங்களின் தன்மையை வெளிப்படுத்தும்.”

“நாங்கள் தோற்றால் அதை ஏற்றுகொள்வதில் எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. இந்தப் போட்டியை நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. மக்கள் எங்களின் எண்ணங்களை மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால், அது அப்படி மாறிவிடாது.”

“நாங்கள் கடுமையாக உழைப்போம். இதற்கு முன்பு விளையாடியது போல நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். தொடர்ச்சியான வெற்றிக்கு மத்தியில் ஒரு தோல்வி ஏற்பட்டால், மொத்த நம்பிக்கையும் அழிந்து விடாது.”

 “நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினர் மற்றும் அதே சமயம், தேவைப்படும் நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் எந்த அழுத்தத்தையும் எடுத்துகொள்ளவில்லை. அவர்கள் நன்றாக பவுலிங் செய்தார்கள், பார்ட்னர்ஷிப் ஏதும் சரியாக அமைக்காமல், அவங்கள் நன்றாக பந்துவீச நாங்களும் விட்டுக்கொடுத்தோம்” என்றார் கோலி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“நாங்கள் குரங்குகள் அல்ல” - அனுஷ்காவுடன் புகைப்படம் பதிவிட்ட விராட் கோலி!
“நாங்கள் குரங்குகள் அல்ல” - அனுஷ்காவுடன் புகைப்படம் பதிவிட்ட விராட் கோலி!
“எனக்குக் கிடைத்துள்ள அனைத்துக்கும் நன்றி” - லாக்டவுனை பாசிட்டிவாக எதிர்கொள்ளும் அனுஷ்கா ஷர்மா!
“எனக்குக் கிடைத்துள்ள அனைத்துக்கும் நன்றி” - லாக்டவுனை பாசிட்டிவாக எதிர்கொள்ளும் அனுஷ்கா ஷர்மா!
“கேப்டனாக கங்குலியிடம் கிடைத்த ஆதரவு, தோனி மற்றும் கோலியிடம் கிடைக்கவில்லை” - யுவராஜ் சிங்!
“கேப்டனாக கங்குலியிடம் கிடைத்த ஆதரவு, தோனி மற்றும் கோலியிடம் கிடைக்கவில்லை” - யுவராஜ் சிங்!
கொரோனா: குதிரை சவாரி திறன்களை வெளிக்காட்டிய ரவீந்திர ஜடேஜா!
கொரோனா: குதிரை சவாரி திறன்களை வெளிக்காட்டிய ரவீந்திர ஜடேஜா!
தலை முடியை ஷேவ் செய்த டேவிட் வார்னர்... ஸ்மித் மற்றும் கோலிக்குச் சவால்!
தலை முடியை ஷேவ் செய்த டேவிட் வார்னர்... ஸ்மித் மற்றும் கோலிக்குச் சவால்!
Advertisement