ப்ரோ கபடி லீக் 2018: முதல் நாள் ஏலத்தின் ஹைலைட்ஸ்

Updated: 19 June 2018 15:13 IST

முதல் நாள் ஏலத்தில் 1 கோடி ரூபாயை கடந்தவர்கள், தீபக் நிவாஸ் ஹூடா மற்றும் நிதின் தோமர்

Pro Kabaddi League 2018 Auction Day 1: Monu Goyat Breaks Record, Fazel Atrachali Most Expensive Foreigner

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையாக மற்ற விளையாட்டு லீக் போட்டிகளும் பிரபலம் அடைந்து வருகின்றன. அந்த வகையில் ப்ரோ கபடி லீக், கபடி போட்டிகள் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு நடக்க உள்ள ப்ரோ கபடி லீக் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் இன்று நடந்தது.

இதில் அனைவரின் கவனத்தையும் பெற்றவர் மோனு கோயல். அவர் தான் இதுவரை நடந்த ஏலத்தில் மிகவும் அதிக காசுக்கு வாங்கப்பட்டவர். மோனுவை, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, 1.51 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதையடுத்து, மும்பை அணி, ஈரானிய வீரர் ஃபேசல் அட்ராசலியை 1 கோடி ரூபாய்க்கு கைவசம் ஆக்கியது. இவரின் குறைந்தபட்ச விலை வெறும் 30 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால், ஃபேசல், அவரின் அசாத்திய திறன் காரணமாக இந்த அளவுக்கு விலை கொடுத்து எடுக்கப்பட்டார்.

இவர்களைத் தவிர முதல் நாள் ஏலத்தில் 1 கோடி ரூபாயை கடந்தவர்கள், தீபக் நிவாஸ் ஹூடா மற்றும் நிதின் தோமர். அவர்கள் முறையே ஜெய்ப்பூர் பின்க் பேன்தர்ஸ் மற்றும் பூனேரி பால்டன் ஆகிய அணிகளால் 1.15 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டனர்.

நிதின் தோமர் தான் கடந்த ஆண்டு அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர். அவரின் சென்ற ஆண்டு விலை, 93 லட்ச ரூபாய் ஆகும். இந்தாண்டு 1 கோடி ரூபாயை கடந்துள்ளார் அவர். உத்தரப் பிரதேச அணி, ரிஷன்க் தேவாடிகாவை 1.11 கோடி ரூபாய் கொடுத்து தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்டது.

சென்ற ஆண்டு நடந்த ப்ரோ கபடி லீக் போட்டிகள் இந்திய அளவில் மிகப் பெரிய ரசிகர்களை பெற்ற நிலையில், இந்த ஆண்டு போட்டிகளை அதை விட பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • கிரிக்கெட் போலவே மற்ற போட்டிகளும் பிரபலமாகிறது
  • ப்ரோ கபடி லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் ஆதரவு
  • இதன் முதல் நாள் ஏலம் நடந்தது
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் ஓய்வு!
உலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் ஓய்வு!
ப்ரோ கபடி லீக்கில் முதல் முறையாக தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்!
ப்ரோ கபடி லீக்கில் முதல் முறையாக தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்!
ஆசிய போட்டிகள்: கபடி போட்டியில், ஈரானின் வெற்றிக்கு ஒரு இந்தியர் தான் காரணமா?
ஆசிய போட்டிகள்: கபடி போட்டியில், ஈரானின் வெற்றிக்கு ஒரு இந்தியர் தான் காரணமா?
கபடி மாஸ்டர்ஸ் 2018: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
கபடி மாஸ்டர்ஸ் 2018: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
கபடி மாஸ்டர்ஸ் 2018: முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
கபடி மாஸ்டர்ஸ் 2018: முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
Advertisement