ப்ரோ கபடி லீக்கில் முதல் முறையாக தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்!

Updated: 21 November 2018 20:49 IST

இதுதான் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ப்ரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸின் முதல் வெற்றி

PKL: Tamil Thalaivas Beat Telugu Titans, Dabang Delhi Defeat Gujarat Fortunegiants
ப்ரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 27-23 என்ற கணக்கில் நேற்று தோற்கடித்தது. © Pro Kabaddi League

ப்ரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 27-23 என்ற கணக்கில் நேற்று தோற்கடித்தது. இதுதான் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ப்ரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸின் முதல் வெற்றி.

தமிழ் தலைவாஸ் அணிக்காக அஜய் தாக்கூர் 8 புள்ளிகளையும், மன்ஜித் முக்கியமான 3 புள்ளிகளையும் பெற்றுத்தந்தனர். சுகேஷ் ஹெட்ஜ் முதல் நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணிக்காக இரண்டு புள்ளிகளைப் பெற்றுத்தந்தார். 

முதல் 5 நிமிடத்தில் இரு அணிகளும் 4-4 என்ற சமநிலையில் இருந்தன. பின் தமிழ் தலைவாஸ் 4 புள்ளிகளை பெற்று 8-4 என்று முன்னிலை பெற்றது. 

முதல் பாதியில் தக்கூர் 6 புள்ளிகளை பெற்றது அணிக்கு பலம் சேர்த்தது. முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் 18-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 

25 நிமிடங்களுக்கு பிறகு தமிழ்தலைவாஸின் முன்னிலை 20-15 என்று மாறியது. 28வது நிமிடத்தில் 5 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தது. அபோஸர் மிஹானியின் தவறு தமிழ் தலைவாஸை 37வது நிமிடத்தில் 26-21 என்று வைத்திருந்தது. 

டைட்டன்ஸின் ராகுல் வாழ்வா சாவா ரைடை தவறியதால் டைட்டன்ஸ் தமிழ் தலைவாஸிடன் 23-27 என்ற கணக்கில் தோல்வியுற்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் ஓய்வு!
உலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் ஓய்வு!
ப்ரோ கபடி லீக்கில் முதல் முறையாக தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்!
ப்ரோ கபடி லீக்கில் முதல் முறையாக தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்!
ஆசிய போட்டிகள்: கபடி போட்டியில், ஈரானின் வெற்றிக்கு ஒரு இந்தியர் தான் காரணமா?
ஆசிய போட்டிகள்: கபடி போட்டியில், ஈரானின் வெற்றிக்கு ஒரு இந்தியர் தான் காரணமா?
கபடி மாஸ்டர்ஸ் 2018: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
கபடி மாஸ்டர்ஸ் 2018: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
கபடி மாஸ்டர்ஸ் 2018: முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
கபடி மாஸ்டர்ஸ் 2018: முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
Advertisement