உலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் ஓய்வு!

Updated: 20 December 2018 15:27 IST

ப்ரோ கபடிக்கோப்பையின் 2வது சீஸனின் மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த அனுப் குமார் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது யூ மும்பா அணி.

Kabaddi World Cup Winning Captain Anup Kumar Announces Retirement
"ஓய்வு பெற்றாலும் வீரராக அல்லாமல் இந்த விளையாட்டில் என்னால் முடிந்த பணியில் தொடருவேன்" என்று அனுப் குமார் கூறியுள்ளார் © Twitter

இந்தியாவின் மிகச்சிறந்த நிலையில் உள்ள கபடி வீரரான அனுப் குமார் கபடி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இந்திய அணியை உலகக் கோப்பையில் வழிநடத்தியவர் அனுப் குமார். புதனன்று ப்ரோ கபடி போட்டியில் ஆடுவதற்கு முன்பு தனது ஓய்வை அறிவித்தார் அனுப். 15 வருட கபடி வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறும் அனுப் குமார் தேசிய அணிக்கு 2010 மற்றும் 2014ல் தங்கம் வெல்ல காரணமாக இருந்தவர். 2012ம் ஆண்டு அர்ஜுனா விருது பெற்றார்.

இவர் தனது சர்வதேச கபடி போட்டிகளை 2006ம் ஆண்டில் இலங்கையில் நடந்த தெற்காசிய போட்டிகளிலிருந்து துவங்கினார். 2014ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் இவரது காலத்தில் 2014ம் ஆண்டு இன்சேன் ஆசிய போட்டிகளையும், 2016ம் ஆண்டு உலகக் கோப்பை கபடிப்போட்டியையும் வென்றது. 

ப்ரோ கபடிக்கோப்பையின் 2வது சீஸனின் மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த அனுப் குமார் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது யூ மும்பா அணி.

ஓய்வை அறிவித்த நுப் குமார் கூறும்போது ''கபடியை நான் பொழுதுபோக்காகத்தான் விளையாட ஆரம்பித்தேன். காலப்போக்கில் அது என் வாழ்க்கையின் முக்கியமான பகுதியானது. நான் கபடியை முழு நேரமாக ஆடத்துவங்கிய போது ஒரு எண்ணம் தான் மனதில் இருந்தது. ஒருநாள் இந்திய அணிக்காக நாம் ஆடி தங்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் அது. அந்த கனவு நிறைவேறியதை என்னால் என் வாழ்வில் மறக்கவே முடியாது'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

"ஓய்வு பெற்றாலும் வீரராக அல்லாமல் இந்த விளையாட்டில் என்னால் முடிந்த பணியில் தொடருவேன்" என்று கூறியுள்ளார். ஓய்வு பெறும் நாள் தான் தனது மகனின் 10வது பிற‌ந்தநாள் அது இன்னும் மறக்கமுடியாத நாளாக அமைந்துள்ளது என்று அனுப் குமார் கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் ஓய்வு!
உலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் ஓய்வு!
ப்ரோ கபடி லீக்கில் முதல் முறையாக தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்!
ப்ரோ கபடி லீக்கில் முதல் முறையாக தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்!
ஆசிய போட்டிகள்: கபடி போட்டியில், ஈரானின் வெற்றிக்கு ஒரு இந்தியர் தான் காரணமா?
ஆசிய போட்டிகள்: கபடி போட்டியில், ஈரானின் வெற்றிக்கு ஒரு இந்தியர் தான் காரணமா?
கபடி மாஸ்டர்ஸ் 2018: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
கபடி மாஸ்டர்ஸ் 2018: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
கபடி மாஸ்டர்ஸ் 2018: முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
கபடி மாஸ்டர்ஸ் 2018: முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
Advertisement