Listen to the latest songs, only on JioSaavn.com
 

“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!

Updated: 27 February 2020 18:07 IST

2020 ஐபிஎல் போட்டிக்கான புதிய லோகோவை ஆர்சிபி அணி அறிமுகம் செய்தது.

Virat Kohli "Thrilled" To See New RCB Logo Ahead Of IPL 2020
விராட் கோலி, 2008ம் ஆண்டில் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஆர்சிபிக்காக விளையாடுகிறார். © AFP

ஆர்சிபி அணி தங்களின் லோகோவை மாற்றிய பின்னர் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி அணி பழைய லோகோவை மாற்றி புதியதை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. “இது சரியாக இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் வீரர்கள் களத்தில் கொண்டு வரும் தைரியமான பெருமை மற்றும் சவாலான உணர்வை உள்ளடக்கி உள்ளது. ஐபிஎல் 2020 க்கு எதிர்நோக்கியுள்ளோம் #NewDecadeNewRCB” என்று கோலி பதிவிட்டுள்ளார். 

“தைரியமான பெருமையையும் சவாலான மனப்பான்மையையும் உள்ளடக்கிய சிங்கத்தை ராயல் சேலன்ஞர்ஸ் அணிக்கு வழங்குவோம்” என்று ஆர்சிபி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டது. ட்விட்டர் பக்கத்தில் ஆர்சிபி அணி, “புதிய தசாப்தம், புதிய ஆர்சிபி மற்றும் இதுதான் எங்களுடைய புதிய லோகோ #PlayBold.” என்று பதிவிட்டது. 

2008ம் ஆண்டு, ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஒரு போட்டியை கூட வெல்லாத ஆர்சிபி, தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் பெயரை மாற்றி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்தப் பக்கத்தில் இருந்த புகைப்படங்கள் எல்லாம் நீக்கப்பட்டு, பெயரும் வெறும் ‘ராயல் சேலன்ஞர்ஸ்' என்று மாற்றியுள்ளது.

இதேபோன்று ஃபேஸ்புக் மற்றும் இஸ்டாகிராம் பக்கங்களுக்கும் செய்யப்பட்டது.

பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, அணியின் கேப்டன் கோலி, “பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் கேப்டனான எனக்கு எந்த அறிவிப்பும் இல்லை. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் தெரிவியுங்கள் @rcbtweets,”  ட்விட் செய்தார்.

மாற்றத்தை பார்த்த ஆர்சிபி அணியின் லெக் ஸ்பின்னரான சாஹலும் அதிர்ச்சியடைந்துள்ளார். “ஆர்சிபி, உங்களுடைய படங்கள் மற்றும் பதிவுகள் எங்கு சென்றன?” என்று ட்விட் செய்துள்ளார்.

“@rcbtweets நம்முடைய சமூக வலைதளப் பக்கங்களுக்கு என்ன ஆச்சு? இது தற்காலிக இடைவேளை என்று நம்புகிறேன்” என்று டி வில்லியர்ஸ் பதிவிட்டார்.

Comments
ஹைலைட்ஸ்
  • கோலி தனது ஐபிஎல் உரிமையான ஆர்சிபியின் புதிய லோகோவை விரும்பினார்
  • விராட் கோலி தற்போது நியூசிலாந்தில் இருக்கிறார்
  • ஆர்சிபி இன்னும் ஐபிஎல் பட்டத்தை கூட வெல்லவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
“அட யாருப்பா நீ?” - கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வேடிக்கையான வீடியோ!
“அட யாருப்பா நீ?” - கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வேடிக்கையான வீடியோ!
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
போதும்... கெளம்பு, கெளம்பு...- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா!
'போதும்... கெளம்பு, கெளம்பு...'- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா!
தோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்!
தோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்!
“நாங்கள் குரங்குகள் அல்ல” - அனுஷ்காவுடன் புகைப்படம் பதிவிட்ட விராட் கோலி!
“நாங்கள் குரங்குகள் அல்ல” - அனுஷ்காவுடன் புகைப்படம் பதிவிட்ட விராட் கோலி!
Advertisement