Listen to the latest songs, only on JioSaavn.com
 

கிரிக்கெட் வாழ்க்கையில் பெஸ்ட் முதல் வொர்ஸ்ட் வரை: மனம் திறந்த 'ஹிட்-மேன்' ரோஹித் ஷர்மா!!

Updated: 27 March 2020 11:20 IST

2011 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாதது அவருக்கு மிகவும் சோகமான தருணம் என்று ரோஹித் ஷர்மா கூறினார்.

Rohit Sharma Talks To Kevin Pietersen About IPL 2020, Lowest Point And "Magic"
2011 ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றதில் இருந்து ரோஹித் ஷர்மா நீண்ட தூரம் வந்துள்ளார். © AFP

ஐபிஎல் 2020 மார்ச் 29ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் இந்த மாத தொடக்கத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போட்டியை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்க முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனுடனான பிரத்யேக உரையாடலில் ரோஹித் ஷர்மா, கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான நிலைமை நாட்டில் சரியானதும் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13வது பதிப்பு நடத்தப்படலாம் என்று கூறினார். “ஒரு கட்டத்தில், நிலைமை சரியானதும், தொடர் நடத்தப்படலாம், யாருக்குத் தெரியும்,” என்று ரோஹித் ஷர்மா கெவின் பீட்டர்சனுடனான இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடலில் கூறினார்.

மும்பை இந்தியன்ஸை நான்கு ஐபிஎல் பட்டங்களைப் பதிவு செய்ய வழிநடத்திய ரோஹித் ஷர்மா, பின்னர் பீட்டர்சனிடம், ரிக்கி பாண்டிங்குடன் உரிமையில் கழித்த நேரம் “மேஜிக்” போன்றது என்று கூறினார்.

ரோஹித்திடம் கேப்டன் பதவியை ஒப்படைப்பதற்கு முன்பு பாண்டிங் 2013ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் செல்வதற்கு முன்பு ஆஸ்திரேலியர் எம்ஐயின் தலைமை பயிற்சியாளராக ஆனார்.

பீட்டர்சன், இந்தியா தொடக்க வீரர் தனது தொழில் வாழ்க்கையில் மிகவும் பாதித்த விஷயம் குறித்துக் கேட்டார். அதற்கு, 2011 உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்படாதது தன்னை கடுமையாகப் பாதித்ததாக ரோஹித் கூறினார்.

“2011 உலகக் கோப்பை அணிக்குத் தேர்வு செய்யப்படாதது என்னை மிகவும் கடுமையாகப் பாதித்தது. இறுதிப் போட்டி எனது சொந்த ஊர் மைதானத்தில் நடைபெற்றது” என்று ரோஹித் கூறினார்.

“என்னுடைய மோசமான ஆட்டம் காரணமாக நான் தேர்வு செய்யப்படவில்லை. அப்போது நான் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை,” என்று ரோஹித் கூறினார்.

இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி 2011ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றதிலிருந்து ரோஹித் ஷர்மா நீண்ட தூரம் வந்துள்ளார்.

அவர் அனைத்து வடிவங்களிலும் இந்தியாவின் பேட்டிங் வரிசையில் முதலிடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் 2019 உலகக் கோப்பையில் போட்டியின் ஒரே தொடரில் ஐந்து சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியாவின் பேட்டிங் வரிசையில் ரோஹித் தனது நிலையை பலப்படுத்தியுள்ளார்
  • எம்ஐயில் ரிக்கி பாண்டிங்வுடன் கழித்த நேரம் “மேஜிக்” போன்றது: ரோஹித்
  • ரோஹித்திடம் பதவியை ஒப்படைப்பதற்கு முன்பு பாண்டிங் எம்ஐ கேப்டனாக இருந்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
தன்னுடைய வொர்க் அவுட் வீடியோவில் சாஹலை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா!
தன்னுடைய வொர்க் அவுட் வீடியோவில் சாஹலை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா!
பேட்டிங் பிரச்னையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை... இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்!
பேட்டிங் பிரச்னையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை... இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்!
தர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்!
தர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்!
கொரோனாவால் பாதிக்கப்படும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் பயிற்சி!
கொரோனாவால் பாதிக்கப்படும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் பயிற்சி!
“Keep It Up” சேலஞ்ச் - டாப் கிரிக்கெட் வீரர்களைப் பரிந்துரை செய்த யுவராஜ் சிங்!
“Keep It Up” சேலஞ்ச் - டாப் கிரிக்கெட் வீரர்களைப் பரிந்துரை செய்த யுவராஜ் சிங்!
Advertisement