Listen to the latest songs, only on JioSaavn.com
 

“குறைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நடத்தலாம்” - ஜோஸ் பட்லர்

Updated: 26 March 2020 18:28 IST

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Coronavirus: Rajasthan Royals Jos Buttler Optimistic About "Shortened IPL"
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியில் முக்கியமான ஒருவராக இருந்தார் ஜோஸ் பட்லர். © BCCI/IPL

இங்கிலாந்து மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குறைக்கப்பட்ட போட்டிகளிலாவது வீரர்கள் விளையாடுவார்கள் என்று நம்புகிறார். கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 5ம் தேதி தொடங்கி இந்தியா மூன்று வாரம் லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் 15க்குப் பிறகு அமைப்பாளர்களால் போட்டியைத் தொடங்க முடியுமா என்பது நிச்சயமற்றதாக உள்ளது.

“தற்போது எந்த செய்தியும் இல்லை. ஆரம்பத்தில், அது ஒத்திவைக்கப்பட்டதை நாம் கண்டோம். உடனடி எதிர்காலத்தில் இது மாறுவதைக் காண்பது மிகவும் கடினம், எனவே இந்த நேரத்தில் ஒரு வாய்ப்பாக நான் அதைப் பார்க்கவில்லை,” என்று பட்லர் கூறினார்.

“இது உலக கிரிக்கெட்டுக்கு ஒரு மிகப்பெரிய போட்டியாகும், எனவே அதில் சில முன்னேற்றம் வர வாய்ப்புள்ளது - ஒருவேளை சுருக்கப்பட்ட போட்டியாக விளையாடப்படலாம்,” என்றார்.

இந்தியாவில் இதுவரை 400க்கும் மேற்பட்ட வழக்குகளும், கொரோனா வைரஸ் காரணமாக ஒன்பது இறப்புகளும் பதிவாகியுள்ளன. உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருந்ததைப் போலவே, வைரஸ் பரவலானது நாட்டில் விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்ய வழி வகுத்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் தொடர் வைரஸ் குறித்த பயம் காரணமாக ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது, அதே நேரத்தில் மற்ற விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“குறைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நடத்தலாம்” - ஜோஸ் பட்லர்
“குறைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நடத்தலாம்” - ஜோஸ் பட்லர்
களத்தில் ஆபாசமான வார்த்தை பேசியதற்காக ஜோஸ் பட்லருக்கு அபராதம்!
களத்தில் ஆபாசமான வார்த்தை பேசியதற்காக ஜோஸ் பட்லருக்கு அபராதம்!
"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை
"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை
இவர் தான் அடுத்த தோனி - லாங்கர் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா?
'இவர் தான் அடுத்த தோனி' - லாங்கர் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா?
உலகக் கோப்பையின் டாப் 3 வீரர்களில் ஸ்மித்துக்கு இடமில்லை: மார்க் வாஹ்
உலகக் கோப்பையின் டாப் 3 வீரர்களில் ஸ்மித்துக்கு இடமில்லை: மார்க் வாஹ்
Advertisement