''ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் எல்லாம் இல்லை.. ஆனால் கோப்பை உள்ளது'' மும்பை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே!

Updated: 13 May 2019 21:11 IST

மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

Mumbai Indians Coach Mahela Jayawardene Gives Rousing Speech After IPL Triumph. Watch
மும்பை அணி ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் என தனிநபர் வெற்றியாக எதையும் பதிவு செய்யவில்லை. © Twitter

மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. "மும்பை அணி ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் என தனிநபர் வெற்றியாக எதையும் பதிவு செய்யவில்லை. ஆனால் ஒட்டுமொத்த அணியாக கோப்பையை வென்றிருக்கிறோம்" என்று உத்வேகம் ததும்ப பேசினார் மும்பை பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்த்தனே பேசியுள்ளார். இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் ''இன்று நாங்கள் எங்கும் விட்டுத்தரவில்லை. நாங்கள் ஆரம்பத்தில் சறுக்கினாலும் மீண்டு வந்து வெற்றிகளை குவித்தோம் என்றார்.

"ஆம். நாங்கள் ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் என தனி நபருக்கான விஷயங்களை வெல்ல வில்லை. ஆனால் நாங்கள் கோப்பையை வென்றுள்ளோம்" என்றார் ஜெயவர்த்தனே.

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி 2013ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறது. இதற்கு முன் சென்னையும் , மும்பையும் 3 முறை வென்றிருந்தன. 

ரோஹித் ஷர்மாதான் ஐபிஎல் ஃபைனலை வென்ற போட்டிகளில் வென்ற அணியின் சார்பாக அதிக முறை ஆடியவர். அவர் 5 முறை வென்ற ஃபைனல் அணியில் இடம்பெற்றுள்ளார்.

2009 டெக்கான் சார்ஜர்ஸுக்காகவும், நான்கு முறை மும்பை அணியிலும் இடம்பெற்ரார். 

கடைசி ஓவர் குறித்து பேசிய ரோஹித் ''ஒட்டுமொத்த அணியாக ஆடி வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. அனுபவ வீரர்கள் அணிக்கு கைகொடுத்தனர். நாங்கள் ஒரு நபரை சார்ந்து செயல்படவில்லை. அதனால் தான் வெற்றி பெறுவது எளிதாக இருந்தது" என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
"பும்ரா எங்கே?" என்ற ரசிகரின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸின் பதில்!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
Advertisement