Listen to the latest songs, only on JioSaavn.com
 

‘தல’ தோனி என்ட்ரி கொடுத்த அந்த கணம்; விசில் சத்தத்தால் அதிர்ந்த மைதானம்!

Updated: 19 March 2019 10:34 IST

மைதானத்துக்கு நடுவே வரும் தோனியே, ரசிகர்களின் இந்த வரவேற்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்

IPL 2019: MS Dhoni Gets Rapturous Reception During CSK Training Session, Former Cricketers And Fans Left Speechless
இந்த வீடியோவை ஆல்பி மார்க்கல், ஸ்காட் ஸ்டைரிஸ் உட்பட பல வெளிநாட்டு வீரர்கள் பகிர்ந்து, தங்களது வியப்பைப் பதிவிட்டுள்ளனர்.  © சிஎஸ்கே/ட்விட்டர்

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் ‘தல' தோனி, சேப்பாக்கத்தில் இருக்கும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பயிற்சி செய்வதற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். அப்போது, மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள், கரகோஷம் எழுப்பியும் விசில் அடித்தும் ஆர்ப்பரித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்தான வீடியோவை சி.எஸ்.கே, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில், மைதானத்திற்க்குள் தோனி, தனது பயிற்சி கிட் உடன் உள்ளே நுழைகிறார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் கூச்சல் செய்து ஆர்ப்பரித்தனர். தொடர்ந்து விசில் அடித்து, ‘தோனி… தோனி…' என்று கோஷம் எழுப்பினர் ரசிகர்கள்.

அந்த வீடியோ இதோ:

மைதானத்துக்கு நடுவே வரும் தோனியே, ரசிகர்களின் இந்த வரவேற்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். இந்த வீடியோவை ஆல்பி மார்க்கல், ஸ்காட் ஸ்டைரிஸ் உட்பட பல வெளிநாட்டு வீரர்கள் பகிர்ந்து, தங்களது வியப்பைப் பதிவிட்டுள்ளனர். 

 

பல ரசிகர்களும் தோனியின் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். வரும் 23 ஆம் தேதி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஐபிஎல் 2019 சீசனின் முதல் போட்டியில் மோதுகின்றன. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்று முடிந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது
  • தோனியின் பயிற்சியைப் பார்க்க 10,000 ரசிகர்கள் குவிந்திருந்தனர்
  • தோனிக்குக் கிடைத்த வரவேற்பை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
“கோலி அல்லது தோனி?” - பலரின் இதயங்களை வென்ற ஷாஹித் கபூரின் பதில்!
“கோலி அல்லது தோனி?” - பலரின் இதயங்களை வென்ற ஷாஹித் கபூரின் பதில்!
“சிஎஸ்கேவின் வெற்றிக்குப் பின்னால் இரண்டு காரணங்கள் உள்ளன” - ஆல்பி மோர்கல்
“சிஎஸ்கேவின் வெற்றிக்குப் பின்னால் இரண்டு காரணங்கள் உள்ளன” - ஆல்பி மோர்கல்
ஐபிஎல் பயிற்சியின் போது தோனி வெளிப்படுத்திய கால்பந்து திறமையை பாருங்க!
ஐபிஎல் பயிற்சியின் போது தோனி வெளிப்படுத்திய கால்பந்து திறமையை பாருங்க!
“போட்டிகளைச் சிறப்பாக முடிப்பதில் தோனி ஒரு மாஸ்டர்” - ஜஸ்டின் லாங்கர்!
“போட்டிகளைச் சிறப்பாக முடிப்பதில் தோனி ஒரு மாஸ்டர்” - ஜஸ்டின் லாங்கர்!
ஐபிஎல் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தோனியின் வீடியோ!
ஐபிஎல் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தோனியின் வீடியோ!
Advertisement