சென்னை ஐஐடி கேள்வித்தாளில் தோனியின் டாஸ் முடிவு பற்றி கேள்வி?

Updated: 08 May 2019 13:19 IST

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐஐடி சென்னை தோனியின் டாஸ் குறித்த கேள்வியை மாணவர்களிடம் கேட்டுள்ளது. 

MS Dhoni Based Question In IIT Madras Paper
நேற்று தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்தது சென்னை அணி. © BCCI/IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி மூன்று முறை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்றுள்ளார். மூன்று முறையும் பந்துவீச்சையே தேர்ந்தெடுத்துள்ளார். இரண்டாவது பேட்டிங்கின் போது பனிப்பொழிவு இருக்கும், அதனால் இலக்கை துரத்துவது எளிதாக இருக்கும் என்ற உத்தியை கையாள்கிறார். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐஐடி சென்னை தோனியின் டாஸ் குறித்த கேள்வியை மாணவர்களிடம் கேட்டுள்ளது. 

சென்னை ஐஐடி பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் அவரது மாணவர்களிடம் "சென்னை கூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி டாஸ் வென்றதும் மும்பைக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் என்ன முடிவெடுப்பார்" என்ற கேள்வியை வினாத்தாளில் கேட்டிருந்தார். 

பனிப்பொழிவு பகலிரவு ஆட்டங்களில் அதிகம் இருக்கும். அதனால், பந்து சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் சரியான வேகத்தில் பந்துவீச முடியாமல் போகும் . அதனால் பெரும்பாலும் சென்னை பந்துவீச்சை தான் தேர்ந்தெடுக்கும். தோனி டாஸ் வென்றால் என்ன செய்வார் என்பதை விளக்கத்துடன் தெரிவிக்கவும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

ஐசிசியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த கேள்வித்தாளின் புகைப்படம் வெளியிடப்பட்டது. 
 

ஆனால், நேற்று தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்தது சென்னை அணி.

மும்பை இந்தியன்ஸ் 9 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. சென்னை அணி குவாலிஃபையர் 2வில் டில்லி , ஹைதராபாத் இரு அணிகளில் ஒன்றை எதிர்கொள்ளும். 

Comments
ஹைலைட்ஸ்
  • ஐஐடி சென்னை தோனியின் டாஸ் குறித்த கேள்வியை மாணவர்களிடம் கேட்டுள்ளது
  • கேள்விதாளின் ஸ்கிரீன்ஷார்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது
  • நேற்று தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
சர்ச்சையை கிளப்பிய தோனி கிளவுஸ்; முத்திரையை அகற்ற வேண்டும் என ஐசிசி திட்டவட்டம்!
சர்ச்சையை கிளப்பிய தோனி கிளவுஸ்; முத்திரையை அகற்ற வேண்டும் என ஐசிசி திட்டவட்டம்!
“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி
“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி
"தோனி கணினியை விட வேகமானவர்" - சோயிப் அக்தர்!
"தோனி கணினியை விட வேகமானவர்" - சோயிப் அக்தர்!
"தோல்வி ஏமாற்றத்தையும், கோவத்தையும் தருகிறது" - தென்னாப்பிரிக்க வீரர் மோரிஸ்
"தோல்வி ஏமாற்றத்தையும், கோவத்தையும் தருகிறது" - தென்னாப்பிரிக்க வீரர் மோரிஸ்
ரணுவத்துக்கு மரியாதை தந்த தோனி... சல்யூட் அடித்த ட்விட்டர்!
ரணுவத்துக்கு மரியாதை தந்த தோனி... சல்யூட் அடித்த ட்விட்டர்!
Advertisement