ஆர்சிபி பயிற்சியின் போது கோலியை சந்தித்த பிரபலம்!

Updated: 20 March 2019 15:01 IST

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸை வரும் மார்ச் 23ம் தேதி ஆர்சிபி எதிர்கொள்கிறது.

Virat Kohli Thanks Sunil Chhetri For Visiting RCB Training Camp - Watch
2019 பட்டத்தை வெல்லும் முனைப்புடன் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது ஆர்சிபி. © Twitter: @imVkohli

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த அணியை திடீரென இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்ப்ரைஸாக சந்தித்தார். ஞாயிறன்று சுனில் சேத்ரி தலைமையில் இந்தியன் சூப்பர் லீக் பட்டத்தை பெங்களூரு அணி முதன் முதலாக வென்றது. கோலி உரிமையாளராக இருக்கும் கோவா அணியை வீழ்த்தி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபியின் அனைத்து வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சுனில் சேத்ரி அங்கு வந்து ஆர்சிபி விரர்களுடன் உரையாடினார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@chetri_sunil11 today with @royalchallengersbangalore team at Chinnaswamy !

A post shared by BleedKohlism2.0 (@bleedingkohlism) on

ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் பட்டம் வென்றதில்லை. 2019 பட்டத்தை வெல்லும் முனைப்புடன் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது ஆர்சிபி.

ஆர்சிபி 2018ம் ஆண்டு ஆடிய அணியிலிருந்து கோலி, டிவில்லியர்ஸ், பார்த்திவ் பட்டேல், சஹால், உமேஷ் யாதவ் ஆகியோரை அணியில் தக்க வைத்தது. ஆர்சிபியின் அதீத நம்பிக்கையாக இந்த சீசனில் ஆல் ரவுண்டர்களையே நம்பியுள்ளது. 

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸை ஆர்சிபி எதிர்கொள்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆர்சிபியின் அனைத்து வீரர்களுடன் சுனில் சேத்ரி உரையாடினார்
  • சுனில் சேத்ரி தலைமையில் இந்தியன் சூப்பர் லீக் பட்டத்தை பெங்களூரு வென்றது
  • ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் பட்டம் வென்றதில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
இந்த முறை
இந்த முறை 'நோட்புக்' சைகை இல்லை... என்ன செய்தார் கெஸ்ரிக் வில்லியம்ஸ்!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
Advertisement