அபாரமான கேட்ச் மூலம் அஷ்வினை வெளியேற்றிய கோலியின் ரியாக்‌ஷன்

Updated: 25 April 2019 11:45 IST

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று சேஸ் செய்த கிங்ஸ் லெவன் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

RCB vs KXIP: Virat Kohli Gives An Abusive Send-Off To Ravichandran Ashwin - Watch
ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு இன்னும் சாத்தியமாகவே உள்ள சூழல் உருவாகியுள்ளது. © Screengrab: www.iplt20.com

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி ஆக்ரோஷமான கொண்டாட்டங்களுக்கு பெயர் போனவர். கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் அப்படி ஒரு கொண்டாட்டத்தை அவர் வெளிப்படுத்தியது அனைவரையும் ரசிக்க வைத்தது. 203 ரன்களை சேஸ் செய்த கிங்ஸ் லெவன் அணிக்கு கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது. கிங்ஸ் லெவன் கேப்டன் அஷ்வின் கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்தார். இரண்டாவது பந்தையும் சிக்ஸர் அடிக்க முற்பட்டார். அது நேராக கோலியின் கைகளுக்கு சென்றது. அபாரமாக கேட்ச் செய்து கோலி கொடுத்த ரியாக்‌ஷன் வைரலானது.

போட்டி முடிந்த பிறகு அஷ்வினிடம் இது குறித்து கேட்டதற்கு "இருவருமே ஆட்டத்தில் அதிக ஈடுபாடு உள்ள வீரர்கள். நானும் இது போன்று செய்வதால் இது எனக்கு தவறாக தெரிவில்லை" என்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு இன்னும் சாத்தியமாகவே உள்ள சூழல் உருவாகியுள்ளது.

டிவில்லியர்ஸ் 44 பந்தில் 82 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் ஆர்சிபி 20 ஓவரில் 4 வ் இக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று சேஸ் செய்த கிங்ஸ் லெவன் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

"கடைசி 5 ஆட்டங்களில் 4 ஐ வென்றுள்ளோம். நாங்கள் மகிழ்ச்சியான கிரிக்கெட்டை ஆடுகிறோம். டிவில்லியர்ஸ் , ஸ்டோனின்ஸ் வெற்றியை எளிதாக்கினர். அவர்கள் ஆட்டம் தான் அணியிஒன் வெற்றிக்கு பெரிதும் உதவியது" என்றார். 

முதல் 6 போட்டிகளை தொடர்ந்து தோற்ற பெங்களூரு தற்போது 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில் மூன்றையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

Comments
ஹைலைட்ஸ்
  • கோலி ஆக்ரோஷமான கொண்டாட்டங்களுக்கு பெயர் போனவர்
  • 203 இலக்குடன் ஆடதொடங்கிய பஞ்சாப்க்கு கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது
  • டிவில்லியர்ஸ் 44 பந்தில் 82 ரன்கள் குவித்து அசத்தினார்
தொடர்புடைய கட்டுரைகள்
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
Advertisement