''ஆர்சிபி ஃபேன்ஸ் எங்களை மன்னிச்சுடுங்க'' நெகிழ வைத்த கோலி, டிவில்லியர்ஸ்

Updated: 04 May 2019 13:42 IST

ஆர்சிபி 2019 ஐபிஎல் தொடரில் முதல் ஆறு போட்டிகளை தொடர்ந்து தோற்றது. கடைசி 7 போட்டிகளில் சிறப்பாக ஆடி 4 போட்டிகளை வென்றது. ஒரு போட்டி மழையால் தடைபட்டது. 

Virat Kohli, AB de Villiers Have A Special Message For Fans Ahead Of RCB vs SRH Match. Watch
கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் இந்த தொடரில் சரியாக ஆடாததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். © AFP

ஆர்சிபி அணியின் முன்னணி வீரர்கள் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் ஆர்சிபி ரசிகர்களிடன், இந்த சீசனில் தொடர்ந்து ஆதரவு தந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஆர்சிபியின் கடைசி லீக் ஆட்டத்துக்கு முன்பாக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆர்சிபி அணி 2019 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு போட்டி ரத்து என்று 9 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது. கடைசி போட்டியில் இன்று ஹைதராபாத் அணியை சந்திக்கிறது. கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் நன்றி மட்டும் தெரிவிக்கவில்லை. இந்த தொடரில் சரியாக ஆடாததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.

ராஜஸ்தானுடம் மழையால் தடைப்பட்ட 5 ஓவர் போட்டி குறித்து பேசிய டிவில்லியர்ஸ் ''இது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆட்டம். அதில் முடிவு எட்டப்படவில்லை'' என்றார்.

ஆர்சிபி 2019 ஐபிஎல் தொடரில் முதல் ஆறு போட்டிகளை தொடர்ந்து தோற்றது. கடைசி 7 போட்டிகளில் சிறப்பாக ஆடி 4 போட்டிகளை வென்றது. ஒரு போட்டி மழையால் தடைபட்டது. இருப்பினும் ஆர்சிபி டாப் 4 அணிகளுக்குள் இடம்பெற முடியவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதரபாத், நான்காம் இடத்துக்கான போட்டியில் உள்ளது. ராஜஸ்தானுடன் தோற்ற பின்பு ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு கலைந்தது.

ஆர்சிபி 13 ஆட்டங்களில் 9 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸின் ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபால் ஐந்து ஓவர் போட்டியில் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்
  • ஆர்சிபி அணியின் ஏற்றத்தாழ்வுகளுக்கு மன்னிப்பு கேட்டார் டிவில்லியர்ஸ்
  • கடைசி போட்டியில் இன்று ஹைதராபாத் அணியை சந்திக்கிறது ஆர்சிபி
தொடர்புடைய கட்டுரைகள்
கோலி மற்றும் ஆர்சிபியை விமர்சித்த விஜய் மல்லையா
கோலி மற்றும் ஆர்சிபியை விமர்சித்த விஜய் மல்லையா
கோலியுடன் வாக்குவாதம் செய்த நடுவர் மீது விசாரணை!
கோலியுடன் வாக்குவாதம் செய்த நடுவர் மீது விசாரணை!
கோலியின் டி20 கேப்டன்ஸி பற்றி கூறும் டேனியல் வெட்டோரி
கோலியின் டி20 கேப்டன்ஸி பற்றி கூறும் டேனியல் வெட்டோரி
ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!
ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!
Advertisement