கோலியை கோபப்படுத்தி ஆர்சிபிக்கு தோல்வியை பரிசளித்த நோபால்!

Updated: 29 March 2019 14:53 IST

போட்டி முடிந்து மும்பை வெற்றி என்று அறிவிக்கப்பட்டதும், மலிங்கா வீசிய பந்து தெளிவாக நோபால் என்பது உறுதியானது.

RCB vs MI: Umpire Makes Game-Changing Error On Final Ball Of IPL 2019 Match. Watch Video
கடைசி பந்தை நடுவர் ரவி நோபால் என அறிவிக்காததால் ஆர்சிபி தோல்வியை சந்திக்கும் சூழல் உருவானது. © BCCI/IPL

மும்பை மற்றும் பெங்களூரு இடையேயான ஐபிஎல் போட்டியில் கடைசி பந்தை நடுவர் ரவி நோபால் என அறிவிக்காததால் ஆர்சிபி தோல்வியை சந்திக்கும் சூழல் உருவானது. போட்டி முடிந்து மும்பை வெற்றி என்று அறிவிக்கப்பட்டதும், மலிங்கா வீசிய பந்து தெளிவாக நோபால் என்பது உறுதியானது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி முதல் வெற்றியை பெற முடியாமல் போனது. அதேசமயத்தில் மும்பை தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

கோலி மைதானத்தின் பெரிய திரையில் நோபாலை பார்த்து ஆத்திரமடைந்தார். "இது மிகப்பெரிய தவறு" என தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ஆட்டம் முடிந்து பரிசளிப்புக்கு முன் இயன் பிஷப்பின் பேட்டிக்கு பதிலளித்த கோலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"நாங்கள் ஐபிஎல் அள‌வில் போட்டிகளை ஆடுகிறோம். ஏதோ க்ளப் கிரிக்கெட் ஆடவில்லை. கடைசி பந்தில் நோபால் வழங்காதது தவறான விஷயம். நடுவர்கள் தங்கள் கண்களை அதிக விழிப்புடன் வைத்திருக்க வேண்டும். அதுவும் இவ்வளவு பெரிய நோபாலை தவறவிட்டுப்பது ஏற்கமுடியாதது. இது போட்டியை தலைகீழாக மாற்றியது" என்றார் கோலி. 

கடைசி பந்தை சிவம் துபே எதிர்கொண்டார். அந்த பந்து நோபால் என்றால் அதில் ஒரு ரன் ஓடியதால் ஒரு பந்தில் 5 ரன் அடிக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியிருக்கும். டிவில்லியர்ஸ் அபாரமாக 41 பந்தில்; 71 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் அவர் ப்ரீ ஹிட்டில் ஆர்சிபியை வெற்றி பெற வைத்திருக்க வாய்ப்பு அதிகம். 

நடுவரின் தவறை ரோஹித் ஷர்மாவும் விமர்சித்தார். "நான் எல்லைக்கோடை தாண்டி பிறகே இது நோ பால் என அறிந்தேன். பும்ரா வீசிய பந்திலும் தவறாக ஒரு வைடு வழங்கினார்" என குற்றம் சாட்டினார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தனது இரண்டாவது போட்டியிலும் தோற்றது. 

பும்ராவின் 17 மற்றும் 19வது ஓவரை சந்திக்க ஆர்சிபி திணறியதும் குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • கடைசி பந்தை நோபால் என அறிவிக்கவில்லை அம்பயர்
  • மலிங்கா வீசிய பந்து தெளிவாக நோபால் என்பது உறுதியானது
  • மும்பை பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
"பெனால்டிக்கெல்லாம் பயமில்லை நீங்கள் செய்தது தவறு" ரெஃப்ரியிடம் பொங்கிய கோலி
"பெனால்டிக்கெல்லாம் பயமில்லை நீங்கள் செய்தது தவறு" ரெஃப்ரியிடம் பொங்கிய கோலி
கோலியை கோபப்படுத்தி ஆர்சிபிக்கு தோல்வியை பரிசளித்த நோபால்!
கோலியை கோபப்படுத்தி ஆர்சிபிக்கு தோல்வியை பரிசளித்த நோபால்!
கடைசி பந்தில் நோபால் சர்ச்சை... அம்பயர்களை சாடிய கோலி!
கடைசி பந்தில் நோபால் சர்ச்சை... அம்பயர்களை சாடிய கோலி!
அம்பயர் தவறால் மும்பை இந்தியன்ஸிடம் தோற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
அம்பயர் தவறால் மும்பை இந்தியன்ஸிடம் தோற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
ஐபிஎல் 2019: 6 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி  #Highlights
ஐபிஎல் 2019: 6 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி #Highlights
Advertisement