கேட்ச் பிடித்த ஜடேஜாவுக்கு முத்தம் கொடுத்த ரெய்னா!

Updated: 01 April 2019 18:50 IST

ரஹானேவை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார் ஜடேஜா. இந்த கேட்ச்சை பிடித்த பிறகு, அருகில் நின்று கொண்டிருந்த ரெய்னா ஜடேஜாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

Suresh Raina Kisses Ravindra Jadeja After Ajinkya Rahane Dismissal - Watch
ஜடேஜா தன்னை ஒரு சிறந்த ஃபீல்டர் என்று மீண்டும் நிரூபித்தார். © BCCI/IPL

ராஜஸ்தான், சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இதில் ஜடேஜா தன்னை ஒரு சிறந்த ஃபீல்டர் என்று மீண்டும் நிரூபித்தார். ஆட்டத்தின் இரண்டாவது பந்தை  தீபக் சஹார் வீசினார். தாழ்வாக வந்த கேட்ச்சை பிடித்து ரஹானேவை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார் ஜடேஜா. இந்த கேட்ச்சை பிடித்த பிறகு, அருகில் நின்று கொண்டிருந்த ரெய்னா ஜடேஜாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

ஜடேஜா 2 ஓவர்கள் வீசி 23 ரன்களை வழங்கினார். கடைசி வரை பரபரப்பாக சென்ற ஆட்டத்தை சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதற்கு தோனியின் அதிரடி ஆட்டம் காரணமாக அமைந்தது.

இதன் மூலம் இந்த சீசனில் ஆடிய அனைத்து போட்டிகளையும் சென்னை வென்றுள்ளது. அடுத்த போட்டியில் புதனன்று வான்கடே மைதானத்தில் மும்பையை சந்தித்தது

Comments
ஹைலைட்ஸ்
  • ஜடேஜா, கேட்ச் பிடித்த பிறகு கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார் ரெய்னா
  • ஜடேஜா தன்னை ஒரு சிறந்த ஃபீல்டர் என்று மீண்டும் நிரூபித்தார்
  • ரஹானேவை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார் ஜடேஜா
தொடர்புடைய கட்டுரைகள்
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
Advertisement